இன்று (08) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன்படி, 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 246 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 4,664 ரூபாவாகும்.

அத்துடன், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 99 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1,872 ரூபாவாகும்.

இதேவேளை, 2.3 கிலோ கிராம்​ எரிவாயு சிலிண்டரின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 859 ரூபாவாகும்.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி