சர்வகட்சி அரசாங்கத்துக்காக அரசியல் கட்சிகள் பலவற்றுடன் கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில், தயாரிக்கப்பட்ட யோசனை, இன்று (08) கையளிக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் 11 கட்சிகளின் தலைவர்கள் மற்றும் 43ஆவது படைப்பிரிவுடன் ஜனாதிபதி செயலகத்தில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

மக்கள் விடுதலை முன்னணி, தேசிய மக்கள் சக்தி மற்றும் இன்னும் சில தமிழ் அரசியல் கட்சிகளுடன் மட்டுமே எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவிருக்கின்றன எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மக்கள் எதிர்பார்புக்காக, அரசியல் ​பேதங்களை மறந்து, சர்வகட்சி அரசாங்கத்தை நிறுவுவது தொடர்பில் அர்ப்பணிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்