முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்து நுழைவதற்கு அனுமதி வழங்குமாறு தாய்லாந்திடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்ததாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

காலி முகத்திடல் கோட்டாகோகம போராட்டக்களத்தில் தங்கியுள்ளவர்களையும் தற்காலிகக் கூடாரங்களையும் பொலிஸார் அகற்றுவதற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 04 மனுக்கள் இன்று வாபஸ் பெறப்பட்டன.

திருடப்பட்ட சொத்துகளை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கான (Stolen Asset Recovery – StAR) திட்டத்தை ஆரம்பிக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

தனியார் துறையில் பணியாற்றும் பெண்கள் மாலை 6.00 மணிக்கு மேல் வேலை செய்யும் கடை மற்றும் அலுவலக பணியாளர்கள் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டில் இன்றைய தினம் 1 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் பணியாற்றிய 103 சீன பிரஜைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை  நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ளது.

2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 75% அதிகரிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

சீன உளவு கப்பலான ‘யுவாங் வாங் 5’ இன், வருகையை ஒத்திவைக்குமாறு, சீன தூதரகத்திடம் ராஜதந்திர கோரிக்கை விடுக்கப்பட்டமையை இலங்கை உறுதிப்படுத்தியுள்ளது. 

இது தொடர்பில்  இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சீனக் கப்பல், 2022 ஆகஸ்ட் 11 முதல் 17 வரை அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதற்கு, இலங்கையின்  இராஜதந்திர அனுமதி, 2022 ஜூலை 12 அன்று கொழும்பில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகத்திற்கு அமைச்சகத்தால் வழங்கப்பட்டது.

இதனையடுத்து மேலதிக ஆலோசனைகள் காரணமாக, அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரும் இந்த கப்பலின் வருகையை ஒத்திவைக்க, கொழும்பில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகத்திடம்  வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது  என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தேவையான திரிபோஷாவை, சுகாதார மற்றும் வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்கள் ஊடாக, இந்த வாரத்திற்குள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான சபை ஒத்திவைப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி