ரீ - 56 துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் எம்பிலிப்பிட்டி - மோதரவான பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


காவல்துறையின் விசேட அதிரடிப்படையினர் மற்றும் உடவளவ இராணுவ முகாம் அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, சந்தேகநபர்களிடம் இருந்து, ரீ-56 துப்பாக்கி, அதற்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் மற்றும் 10 கிராம் ஹெரோயின் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

பின்னர் சந்தேகநபர்களின் வீட்டை சோதனைக்கு உட்படுத்திய போது, அவர்களில் ஒருவரது வீட்டிலிருந்து போலியான வகையில் தயாரிக்கப்பட்டிருந்த 2 வாகன இலக்க தகடுகளும் மீட்கப்பட்டுள்ளன.

கைதானவர்கள் கஹவத்தை மற்றும் எம்பிலிப்பிட்டி பகுதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 38 வயதுடையவர்கள் என்பதுடன், சந்தேகநபர்கள் எதிர்வரும் 17ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி