பிள்ளைகளின் உடல்நிலை குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

விலைச்சூத்திரத்தின்படி, எரிபொருளின் விலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழகங்களையும் விரைவில் மீள ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையானது தமது வாடிக்கையாளர்களை மின் இதழ் கட்டணப் பட்டியல் (e-Bill) முறைக்கு மாற்றம் செய்யவுள்ளது.

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக நாவலப்பிட்டி - கெட்டபுலா அக்கரவத்தை பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு காணாமல்போன 3 பேரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மாகாண நிர்வாகம் மற்றும் அபிவிருத்தி செயன்முறைகளை ஒழுங்கான முறையில் பேணுதல் மற்றும் மாகாண சபையின் செலவினங்களை நிர்வகித்தல் போன்ற பொறுப்பு ஆளுநர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

காலிமுகத்திடல் போராட்டம் தொடர்பில் சமூக ஊடகங்களில்  கருத்து வெளியிட்ட பிரித்தானிய பெண்ணான கெய்லி பிரேசருக்கு விசா வழங்குவதை நிறுத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முடிவு செய்துள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) உரிய நடைமுறைகளுக்கு இணங்காமல் மேற்கொள்ளப்படும் கைதுகள் மற்றும் தடுப்புகள் தொடர்பில் தமது கருத்துகளை தெரிவித்துள்ளது .

ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை எதிர்கொள்வதற்காக , இலங்கையினால் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையை தயாரிக்கும் பணிகள் தொடர்பில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு திருத்த சட்டமூலம் மீதான விவாதத்திற்கான திகதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியால் பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டமையூடாக மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள 03 அடிப்படை உரிமை மனுக்களை, எதிர்வரும் 12 ஆம் திகதி பரிசீலனை செய்ய உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் தற்காலிகமாக தங்குவதற்காக கோரிக்கை விடுத்துள்ளதாக தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி