கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு திருத்த சட்டமூலம் மீதான விவாதத்திற்கான திகதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

 

அதன்படி 30 மற்றும் 31 ஆம் திகதிகளிலும், செப்டம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளிலும் காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை விவாதம் நடைபெறும் என நாடாளுமன்ற அலுவல்கள் குழு தெரிவித்துள்ளது.

அதேநேரம் எதிர்கட்சிகளின் கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் 29ஆம் திகதி காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மின்சாரக் கட்டணங்கள் மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒதுக்கீட்டு திருத்தச் சட்டமூலத்தின்படி, இந்த வருட அரசாங்கத்தின் மொத்தச் செலவு கடந்த ஆண்டைவிட 47 ஆயிரத்து தொள்ளாயிரத்து 43 கோடி ரூபாயால் அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டுக்காக, கடந்த நவம்பரில் சமர்ப்பிக்கப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி, மொத்தச் செலவு, 2 இலட்சத்து ஒன்பதாயிரத்து 664 கோடியே 65 இலட்சத்து 58 ஆயிரமாகும்.

இருப்பினும் திருத்தச் சட்டமூலத்தின்படி மொத்தச் செலவு 3 இலட்சத்து 27 ஆயிரத்து 587 கோடியே அறுபத்தைந்து இலட்சத்து 58 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி