பிள்ளைகளின் உடல்நிலை குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.



தற்போது கொரோனா வைரசு தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு, முதல் இரண்டு நாட்களில் அதிக காய்ச்சல் காணப்படும். இதனால் விசேடமாக அவ்வாறு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பொரளை ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பிள்ளைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தவிர டெங்கு மற்றும் இன்புளுவன்சா நோயாளர்களும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த வாரத்தில் மூச்சுத் திணறல் (wheezing) நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி