1200 x 80 DMirror

 
 

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, ஹஷாந்த குணதிலக்க மற்றும் கல்வல சிறிதம்ம தேரர் ஆகியோரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அனுமதி கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

நியூஸ்பெஸ்ட் வினவியபோது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்.

கடந்த 18ஆம் திகதி அனைத்து பல்லைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பில் நடத்திய எதிர்ப்பு நடவடிக்கையின் போது வசந்த முதலிகே உள்ளிட்ட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவர் தவிர்ந்த ஏனைய 15 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

ஒருவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரும் முதலில் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

பாதுகாப்பு அமைச்சரின் அனுமதிக்கு கிடைத்துள்ளதால் அவர்கள் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி