செய்திகள்
Showing page 914 of 1202 (18,020 articles)

ஜனாதிபதியின் பணிப்புரையையும் மீறி மின்வெட்டு தொடருமா?
இலங்கையில் தற்போது 7 மணித்தியாலத்திற்கும் அதிகமான மின் விநியோக தடை அமுல் படுத்தப்பட்டு வரும் நிலையில் மின்சார நெருக்கடியைத் தவிர்ப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

'இலங்கையில் தற்போதைய நெருக்களுக்கு இருமாதங்களில் தீர்வு' - பிரசன்னவின் நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மை!
இலங்கையில் தற்போது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள டொலர் உள்ளிட்ட நடைமுறை பிரச்சினைகளுக்கு இன்னும் இருமாத காலத்திற்குள் தீர்வு பெற்றுக்கொள்ள முடியும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எரிபொருள் விலை கூடினாலும் வீதிகளில் வாகனங்கள் குறையவில்லையாம்! ஜொன்ஸ்டன்
எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும் வீதிகளில் வாகனங்கள் குறையவில்லை என்று நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் திறனற்ற நிர்வாகம் : 7 மணி நேர மின்வெட்டு!
அரசாங்கத்தின் சீரற்ற முகாமைத்துவத்தால் தற்போது 7 மணி நேர வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.

தேசிய சிறுநீரக வைத்தியசாலை வெள்ளை யானையானது! கவலையில் மைத்திரி
இலங்கையின் முதலாவது தேசிய சிறுநீரக வைத்தியசாலை, இந்த தினற்ற அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் வெள்ளையானது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டம் ஜனநாயகத்திற்கான சுதந்திரத்தை கட்டுப்படுத்தக் கூடாது – ஐ.நா.வில் இலங்கை!
பயங்கரவாத தடைச் சட்டம் கருத்து சுகந்திரம் உள்ளிட்ட ஜனநாயக சுதந்திரத்தை கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் இலங்கை உறுதியாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வில் தெரிவித்துள்ளார்.

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது -அரச தரப்பு!
இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரதின ஒரு நேர்காணலில் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவரை தாக்கிய இராஜாங்க அமைச்சரின் ஆதரவாளருக்கு விளக்கமறியல்!
கிழக்கு மாகாணத்தில் தமிழ் ஊடகவியலாளர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் ஆதரவாளரை மார்ச் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புடினுக்கு நிறுத்த முடியுமா?
ரஷ்யா உக்ரேன் ஆக்கிரமித்து இன்னும் 48 மணித்தியாலங்கள் ஆகவில்லை. அதிகமானவர்கள் குறிப்பிடுவது இது மூன்றாம் உலக மகா யுத்தம் வரை விருத்தியடைந்து கொண்டு செல்லும் என்று. எவ்வாறு

மியன்மார் அரிசி இறக்குமதி ஒப்பந்தத்தில் இலங்கைக்கு 15 மில்லியன் டொலர்கள் இழப்பு!
மியன்மார் மற்ற நாடுகளுக்கு அரிசி விற்கும் விலையை விட இலங்கைக்கு 305 மில்லியனுக்கும் அதிக விலைக்கு அரசியியை விற்பனைசெய்துள்ளதாக 'அருணா' நாளிதழ் தெரிவித்துள்ளது.

யுக்ரேன்-ரஷ்யா மோதலால் இலங்கை தேயிலைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!
ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய நாடுகளுக்கு இடையில் சண்டை நடந்து வரும் நிலையில், இலங்கையின் ஏற்றுமதி துறைக்கும் அதனால் பாதிப்பு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது. பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில், இது மேலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று கூறப்படுகின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர அவசர அனுமதி கோரும் உக்ரைன் - 3ஆம் உலகப்போர் ஏற்படும் அபாயம்!
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து 6வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் உக்ரைனில் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் இழுவைமடி வலைகளைப் பயன்படுத்த தொடர்ந்தும் அனுமதி!
வடபகுதி மீனவர்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி பல கட்டமாக போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர். கொழும்பு புகையிரத நிலையம் முன்பாக இன்றும் (28.02.2022) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் பிரான்ஸ் உடனான முக்கிய ஒப்பந்தங்களில் கைசாத்து!
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பல்வேறு துறைகளில் இலங்கையுடனான பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதற்கான முயற்சியில் பிரான்ஸ் வர்த்தக மற்றும் பொருளாதார கவர்ச்சிக்கான அமைச்சர் Franck Riester ஐ பாரிஸில் உள்ள வெளிவிவகார அமைச்சில் சந்தித்துள்ளார்.

2 சிறுவர்கள் உட்பட 08 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
கிளிநொச்சி இரணைதீவு கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

