Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!

Menaka

Menaka

நவம்பர் 2, 2026 • 9:49 AM

8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகங்களுக்கு முன்னால் இத்தினங்களில் காணக்கூடியதாகவுள்ள நீண்ட வரிசைகள் மற்றும் மக்கள் நெருரிசல்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, வரி அதிகாரிகளினால் விசேட அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது.
  • நவம்பர் 01 ஆம் திகதி முதல் TIN சான்றிதழைச் சமர்ப்பிப்பது குறிப்பிட்ட எட்டு கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே கட்டாயமானது என உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் ருக்தேவி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
  • மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளைத் தவிர்த்து நாளாந்த வாழ்க்கையின் ஏனைய பொதுவான நடவடிக்கைகளின் போது TIN சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமானதன்று.
  • வயதுச் சட்டமும் வரிச் செலுத்துகையும் உள்நாட்டு இறைவரிச் சட்டம் மற்றும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களுக்கு அமைய, 18 வயதைப் பூர்த்தி செய்த அனைத்து இலங்கை வாழ் குடிமக்களும் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
எழுத்து அளவு:

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகங்களுக்கு முன்னால் இத்தினங்களில் காணக்கூடியதாகவுள்ள நீண்ட வரிசைகள் மற்றும் மக்கள் நெருரிசல்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, வரி அதிகாரிகளினால் விசேட அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 01 ஆம் திகதி முதல் TIN சான்றிதழைச் சமர்ப்பிப்பது குறிப்பிட்ட எட்டு கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே கட்டாயமானது என உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் ருக்தேவி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எனவே அவசர அல்லது அத்தியாவசியத் தேவைகள் இல்லாதபட்சத்தில் திணைக்கள அலுவலகங்களுக்கு வருகை தந்து அசௌகரியங்களுக்கு உள்ளாக வேண்டாம் என அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சான்றிதழ் கட்டாயமாகும் 8 கொடுக்கல் வாங்கல்கள் இதோ:

2026 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க திருத்தப்பட்ட சட்டத்திற்கு அமைய, செல்லுபடியாகும் TIN சான்றிதழ் ஒன்றை பின்வரும் நடவடிக்கைகளின் போது மாத்திரமே சமர்ப்பிக்க வேண்டும்:

  1. வங்கியொன்றில் அல்லது நிதி நிறுவனமொன்றில் புதிய கணக்கொன்றைத் திறத்தல்.

  2. கடன் அட்டை (Credit Card) ஒன்றைப் பெற்றுக்கொள்ளல்.

  3. கட்டிடத் திட்டமொன்றை (Building Plan) அங்கீகரித்துக் கொள்ளல்.

  4. மோட்டார் வாகனமொன்றைப் பதிவு செய்தல்.

  5. மோட்டார் வாகன வருமானப் பத்திரத்தைப் (Revenue License) புதுப்பித்தல்.

  6. காணி ஒன்றினை அல்லது காணி உரிமையைப் பதிவு செய்தல்.

  7. வியாபாரமொன்றைப் பதிவு செய்தல்.

  8. நிறுவனமொன்றின் பங்குகளைக் கைமாற்றுதல் (இதன்போது பங்குகளைக் கைமாற்றிய மற்றும் பெற்றுக்கொண்ட இரு தரப்பினரும் சான்றிதழை வழங்க வேண்டும்).

மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளைத் தவிர்த்து நாளாந்த வாழ்க்கையின் ஏனைய பொதுவான நடவடிக்கைகளின் போது TIN சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமானதன்று.

18 வயதுச் சட்டமும் வரிச் செலுத்துகையும்

உள்நாட்டு இறைவரிச் சட்டம் மற்றும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களுக்கு அமைய, 18 வயதைப் பூர்த்தி செய்த அனைத்து இலங்கை வாழ் குடிமக்களும் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஆயினும், TIN இலக்கமொன்றை வைத்திருப்பதனாலேயே ஒருவர் வரி செலுத்தக் கடமைப்பட்டவர் ஆகமாட்டார். சட்டத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள வருடாந்த வருமான எல்லையை மீறும் நபர்களிடமிருந்தே வரிகள் அறவிடப்படும். TIN இலக்கம் என்பது வரி ஆவணக் கோப்பொன்றில் நபரை அடையாளப்படுத்தும் இலக்கம் அல்லது அடையாள அட்டை மட்டுமேயாகும்.

அலுவலகங்களுக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே TIN இலக்கத்தைப் பெறும் வழிமுறை

தேவைப்பாடுள்ள எவருக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ மின்னணுச் சேவை (e-Services) இணையத்தளப் பிரவேசத்தின் ஊடாக மிக இலகுவாக TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

தனக்கு ஏற்கனவே TIN இலக்கமொன்று வழங்கப்பட்டுள்ளதா என்பதைப் பரிசோதித்துக் கொள்வதற்கான வசதியும் குறித்த இணையத்தளத்தில் காணப்படுகின்றது. அவ்வாறு உறுதிப்படுத்திய பின்னர் தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கம் மற்றும் TIN இலக்கம் அடங்கிய அச்சிடப்பட்ட பிரதி (Printout) மேலே குறிப்பிடப்பட்ட எட்டு கொடுக்கல் வாங்கல்களுக்கும் செல்லுபடியாகும் ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படும்.

சட்ட மாற்றங்களுக்கு மத்தியில் பதற்றமடையாது, டிஜிட்டல் வழிமுறைகளைப் பயன்படுத்தி வீட்டிலிருந்தபடியே இச்சேவைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு இறைவரித் திணைக்களம் மக்களுக்கு நினைவூட்டுகின்றது.

யாரேனும் ஒருவர் இதுவரை TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளவில்லையாயின், TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மின்னணுச் சேவை (Sri Lanka Inland Revenue e-Services) ஊடாக விண்ணப்பிக்க முடியும் எனவும் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.

(குறிப்பு - ஜே. முனசிங்க)

மேலதிகத் தகவல் மற்றும் பின்னணி மூலங்கள்:

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

#TIN#Only 8 Transactions#IRD
Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...