Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

மியன்மார் அரிசி இறக்குமதி ஒப்பந்தத்தில் இலங்கைக்கு 15 மில்லியன் டொலர்கள் இழப்பு!

T

The Leader Desk

மார்ச் 1, 2022 • 4:47 AM

மியன்மார் அரிசி இறக்குமதி ஒப்பந்தத்தில் இலங்கைக்கு 15 மில்லியன் டொலர்கள் இழப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதன்படி, மியன்மாரிலிருந்து இலங்கை கொள்வனவு செய்த ஒரு மெட்ரிக் தொன் அரிசிக்கான மேலதிக கொடுப்பனவு 100 டொலர்கள் ஆகும்.
  • இது இலங்கை மதிப்பில் 20,300 ரூபாய்க்கு அதிகம் ஆகும்.இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கை இறக்குமதி செய்யவுள்ள அரிசியின் அளவு 150,000 மெற்றிக் தொன் என அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
  • இதேவேளை, நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, நாட்டுக்கு 15 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொடுக்கும் மியன்மார் அரிசி ஒப்பந்தம் சந்தேகத்திற்குரியது எனவும் குறிப்பிட்டார்.
எழுத்து அளவு:

மியன்மாரிடமிருந்து ஒரு மெட்ரிக் தொன் அரிசியை இலங்கை 440 டொலர் மற்றும் 450 டொலர்களுக்கு இடைப்பட்ட விலையில் கொள்வனவு செய்யும் என இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.ஆனால் சமீபத்தில் மியான்மர் மற்ற நாடுகளுக்கு ஒரு மெட்ரிக் டன் அரிசியை  340 டொலர் முதல் 350 டொலர்களுக்கு  விற்பனை செய்துள்ளதாக மியான்மரின் முன்னணி நாளிதழான Global New Light Of Myanmar செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, மியன்மாரிலிருந்து இலங்கை கொள்வனவு செய்த ஒரு மெட்ரிக் தொன் அரிசிக்கான மேலதிக கொடுப்பனவு 100 டொலர்கள் ஆகும். இது இலங்கை மதிப்பில் 20,300 ரூபாய்க்கு அதிகம் ஆகும்.இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கை இறக்குமதி செய்யவுள்ள அரிசியின் அளவு 150,000 மெற்றிக் தொன் என அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

sdretr

இலங்கை அரசாங்கம் ஒரு டன் ஒன்றுக்கு 450 அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்யும் அதேவேளை ஏனைய நாடுகள் அதனை ஒரு டன் 350 டொலர்களுக்கு கொள்வனவு செய்வதாகவும், அரிசியின் தரத்தை அவர்கள் பொருட்படுத்துவதில்லை எனவும் மியான்மர் அரிசி வர்த்தக சங்கத்தின் செயலாளர் அண்மையில் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். 

மேலும் இலங்கையுடனான அரிசி ஒப்பந்தம் மிகவும் இலாபகரமானதாக உள்ளது என்றும் செய்தித்தாள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, அரசாங்கத்துடன் தொடர்புடைய ஒரு அதிகார பலம்மிக்க நபர் அரிசி தொன் ஒன்றுக்கு  100 டொலர் தரகு பணமாக வசூலிப்பதாகவும் இந்த இற்குமதிக்கு மட்டும் இரண்டு வருடங்களில் 30 மில்லியன் டாலர் தரகு பணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக முன்னாள் இலங்கை அபிவிருத்தி நிர்வாகத்தின் (SLIDA) மூத்த ஆலோசகர் ஐ.எஸ். ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, நாட்டுக்கு 15 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொடுக்கும் மியன்மார் அரிசி ஒப்பந்தம் சந்தேகத்திற்குரியது எனவும் குறிப்பிட்டார்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...