வேட்பாளர் யார் என்பது தொடர்பில் இன்னமும் தீர்மனிக்கப்படவில்லை என்றும், அடுத்த வாரத்தில் அதனைத் தெரிவிக்க முடியும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் கூறினார். நேற்று வியாழக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ள சஜித் பிரேமதாசாவின் கொள்கை பிரகடணத்தை வாசிப்பதற்கு தனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
இதனிடையே தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் வட மாகாண முதலமைச்சருமான சீ. வீ. விக்னேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்காக 13 கோரிக்கைகளை சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளர்களின் கவத்திற்குக் கொண்டு வரப்பட்ட போது கோட்டாபய ராஜபக்ஷ பேச்சுவார்த்தையின்றி உடனடியாக பதிலை வழங்கி அது நிராகரிக்கப்பட்டதோடு, ஏனையவர்களிடத்திலிருந்தும் இதற்கான பதில் கிடைக்காத காரணத்தினால் சிறுபான்மையினர் தொடர்பில் உணர்வு பூர்வமற்ற சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்கை அளிப்பது பயனற்றது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பார்கள் என்றும், வாக்களிப்பை பகிஷ்கரிக்கப் போவதில்லை என்றும் அவர் மேலும் கூறும் போது தெரிவித்துள்ளார்.
தேர்தலில் வாக்களிப்பு பகிஷ்கரிப்பு எதுவுமில்லை - TNA யின் தீர்மானம் அடுத்த வாரம்!
T
The Leader Desk
நவம்பர் 1, 2019 • 4:38 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- வேட்பாளர் யார் என்பது தொடர்பில் இன்னமும் தீர்மனிக்கப்படவில்லை என்றும், அடுத்த வாரத்தில் அதனைத் தெரிவிக்க முடியும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.
- இதனிடையே தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் வட மாகாண முதலமைச்சருமான சீ.
- நேற்று வியாழக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ள சஜித் பிரேமதாசாவின் கொள்கை பிரகடணத்தை வாசிப்பதற்கு தனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

