Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

சஜித்தின் ஆரோக்கிய துவாய் (பேட்) பேச்சுக்கு ரொஷான் மகாநாமவின் கருத்து! Inbox x

T

The Leader Desk

நவம்பர் 6, 2019 • 6:17 PM

சஜித்தின் ஆரோக்கிய துவாய் (பேட்) பேச்சுக்கு ரொஷான் மகாநாமவின் கருத்து! Inbox 	x

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தீா்மானிப்பாளராகவும் பணியாற்றும் ரொஷான் மகாநாம தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டு, இந்நாட்டிகளில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் பெண்களுக்கான ஆரோக்கிய துவாய் (பேட்) தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
  • புதிய உலகில் வாழும் மக்களாக இந்த குறுகிய எல்லையிலிருந்து விலகி பெண்களது இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சமூக கருத்துக்களை உருவாக்க வேண்டும்.
  • சமூகத்தினுள் இவ்வாறான விடயங்களைப் பேசுவத்கு உள்ள தயக்கத்தினால் இவை மறைக்கப்பட்டுப் போன பிரச்சினையாகியுள்ளது.
எழுத்து அளவு:

தீா்மானிப்பாளராகவும் பணியாற்றும் ரொஷான் மகாநாம தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டு, இந்நாட்டிகளில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் பெண்களுக்கான ஆரோக்கிய துவாய் (பேட்) தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கை சனத்தொகையில் 62 வீதமாக இருக்கும் பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்களை வேறாகப் பார்த்தலுக்கு எதிராக சமூக ஊடகம் மற்றும் ஊடகங்களுக்கு அப்பால் சென்ற செயற்பாடுகள் அவசியம் என்றும், சுகாதாரம், ஆரோக்கியம், கல்வி மற்றும் தொழில் சந்தர்ப்பங்களுக்காகவும் அவர்களுக்கு சமத்துவம் வழங்குவது நாட்டுப் பிரஜைகளான எமது பொறுப்பாகும்.

பெண்களினது, பெண் பிள்ளைகளினது ஆரோக்கியத் தேவைகள் மற்றும் அவற்றுக்குத் தேவையானவைகளை அவர்களால் பெற்றுக் கொள்ள முடியாத காரணத்தினால் அன்றாடம் கல்வி நடவடிக்கைகள் மற்றும் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத பெண்கள் இன்றும் வாழும் நாட்டில் நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் பெண்களின் ஆரோக்கிய தலைப்புக்கு அப்பால் சென்ற ஒன்றாக ஆகியிருக்க வேண்டியது என்றாலும் சிலர் இதற்கு எதிராகத் தாக்குதல் மேற்கொண்டிருப்பதைக் காணக் கூடியதாக உள்ளதாகவும் ரொஷான் மகாநாம தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்தினுள் இவ்வாறான விடயங்களைப் பேசுவத்கு உள்ள தயக்கத்தினால் இவை மறைக்கப்பட்டுப் போன பிரச்சினையாகியுள்ளது. புதிய உலகில் வாழும் மக்களாக இந்த குறுகிய எல்லையிலிருந்து விலகி பெண்களது இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சமூக கருத்துக்களை உருவாக்க வேண்டும்.

மூன்று பெண்பிள்ளைகளின் தந்தை என்ற வகையில் தனக்கு அவர்களது தேவைகள் தொடர்பில் புரிந்துணர்வு உள்ளது என்றும், எனவே ஒட்டு மொத்த பெண்களுக்காக குரல் கொடுப்பதற்கு தான் பின்நிற்கப்போவதில்லை என்றும் அவர் அந்தக் குறிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...