Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

T

The Leader Desk

மார்ச் 14, 2020 • 11:32 AM

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.
  • இதேவேளை நேற்று 3 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
  • குறித்த 3 நோயாளர்களில் ஒருவர் 41 வயதுடையவர் எனவும் அவர் ஜேர்மனியில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
  • ஏனைய 2 நோயாளர்களும் கந்தகாடு கண்காணிப்பு மத்திய நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எழுத்து அளவு:

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

கந்தகாடு கண்காணிப்பு மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவரும் மற்றும் நாத்தான்டிய பிரதேசத்தில் ஒருவரும் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதன்போது தெரிவித்தார்.

அவர்கள் இருவரும் இத்தாலியில் இருந்து இந்நாட்டுக்கு வருகை தந்தவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை நேற்று 3 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

குறித்த 3 நோயாளர்களில் ஒருவர் 41 வயதுடையவர் எனவும் அவர் ஜேர்மனியில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய 2 நோயாளர்களும் கந்தகாடு கண்காணிப்பு மத்திய நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இன்று (14) முதல் இரண்டு வாரங்களுக்கு பொதுக் கூட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதற்கான அபாயத்தைக் குறைப்பதற்காக அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

விசேடமாக பொதுமக்கள் பெருமளவில் கூடும் வைபவங்கள், கூட்டங்கள் போன்ற கூட்டங்களுக்கு பொலிஸ் அனுமதி வழங்கப்படாது என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...