Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

மொட்டுக்கு 6; ரணிலுக்கு 4: புதிய அமைச்சர்கள் நியமனம்

T

The Leader Desk

ஜனவரி 30, 2023 • 4:56 AM

மொட்டுக்கு 6; ரணிலுக்கு 4: புதிய அமைச்சர்கள் நியமனம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
  • அதற்கு அமைவாக 6 அமைச்சுக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும், 4 அமைச்சுக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரும்புகிறவர்களுக்கும் வழங்கப்படவுள்ளன.
  • ஆரம்பத்தில் 12 அமைச்சுக்கள் எஞ்சி இருந்தன.
  • அவற்றுள் 7 அமைச்சுக்கள் மொட்டுக் கட்சிக்கும், 5 அமைச்சுக்கள் ரணில் விக்கிரமசிங்க விரும்புகின்றவர்களுக்கும் என ஒதுக்கப்பட்டிருந்தன.
எழுத்து அளவு:

ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதற்கு அமைவாக 6 அமைச்சுக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும், 4 அமைச்சுக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரும்புகிறவர்களுக்கும் வழங்கப்படவுள்ளன.

ஆரம்பத்தில் 12 அமைச்சுக்கள் எஞ்சி இருந்தன. அவற்றுள் 7 அமைச்சுக்கள் மொட்டுக் கட்சிக்கும், 5 அமைச்சுக்கள் ரணில் விக்கிரமசிங்க விரும்புகின்றவர்களுக்கும் என ஒதுக்கப்பட்டிருந்தன.

அவற்றுள் முதல் கட்டமாக மொட்டு சார்பில் பவித்ரா வன்னியாராச்சிக்கும், ஜனாதிபதியின் சார்பில் ஜீவன் தொண்டமானுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

மொட்டு சார்பில் இன்னும் 6 பேருக்கு அமைச்சுக்கள் வழங்கப்படவுள்ளன. அவற்றுள் ரோஹித அபேகுணவர்தன, ஜோன்சன் பெர்னாண்டோ, எஸ்.எம்.சந்திரசேன, மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்டவர்கள் அடங்குகின்றனர்.

இவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்க முடியாது என்றும், மக்கள் மத்தியில் இவர்களுக்கு நல்ல பெயர் கிடையாது என்றும் கூறி வந்த ஜனாதிபதி இப்போது முடிவை மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஜனாதிபதி சார்பில் இன்னும் நால்வருக்கு வழங்கப்படவுள்ளன. அவர்களுள் வஜிர அபேவர்த்தன, துமிந்த திஸாநாயக்க ஆகியோரும் அடங்குகின்றனர்.

ஏனைய இரண்டில் ஒன்று ராஜித சேனாரத்னவுக்கு வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. இது நீண்ட காலமாகப் பேசப்பட்டு வருகின்றது. ராஜித அதை மறுக்கவில்லை. இருந்தாலும், தனியே சென்று அரசில் இணையமாட்டேன் என்று கூறியுள்ளார்.

மற்றைய ஒன்று அரசில் உள்ள ஜனாதிபதியின் நெருக்கமான ஒருவருக்கு வழங்கப்படவுள்ளது.

பஸில் ராஜபக்ச பிரயோகித்த கடும் அழுத்தம் காரணமாகவே இந்த நியமனம் ஆரம்பமாகியுள்ளது என்று அறியமுடிகின்றது.

ஒரே நேரத்தில் எல்லா அமைச்சர்களையும் நியமித்தால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் என்பதால் கட்டங்கட்டமாக நியமிப்பதற்கு ஜனாதிபதி முடிவெடுத்துள்ளார்.

இதற்குப் பஸிலும் இணக்கம் தெரிவித்துள்ளார். இதற்கு அமைவாகவே பவித்ராவும் ஜீவனும் முதலில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...