Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

'இலங்கையில் 5 மில்லியனுக்கும் அதிக மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது'

T

The Leader Desk

டிசம்பர் 29, 2022 • 2:04 PM

'இலங்கையில் 5 மில்லியனுக்கும் அதிக மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது'

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை குழு சுட்டிக்காட்டியுள்ளன.
  • குறித்த அமைப்பின் தரவுகளுக்கு அமைய, நாட்டில் 5.7 மில்லியன் மக்கள், மொத்த சனத்தொகையில் 26 வீதம் அல்லது அதற்கும் மேற்பட்ட அளவானவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • குறைந்தபட்சம் இலங்கை சனத்தொகையில் 4.9 மில்லியன் அதாவது 22 சதவீதமான மக்கள் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
  • தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் நாட்டிலுளள 11 வீதமான குடும்பங்கள் வருமானத்தை இழந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சங்கம், வருமான மட்டம் 62 வீதமாக குறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை குழு சுட்டிக்காட்டியுள்ளன.

இலங்கை தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி சமூகத்திலுள்ள அனைவரையும் பாதித்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை குழு குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளன.

குறித்த அமைப்பின் தரவுகளுக்கு அமைய, நாட்டில் 5.7 மில்லியன் மக்கள், மொத்த சனத்தொகையில் 26 வீதம் அல்லது அதற்கும் மேற்பட்ட அளவானவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் இலங்கை சனத்தொகையில் 4.9 மில்லியன் அதாவது 22 சதவீதமான மக்கள் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

5 வயதுக்குட்பட்ட சிறார்கள் போஷாக்கு குறைபாட்டை எதிர்கொள்வதாகவும் குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் நாட்டிலுளள 11 வீதமான குடும்பங்கள் வருமானத்தை இழந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சங்கம், வருமான மட்டம் 62 வீதமாக குறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மொத்த சனத்தொகையில் 85 வீதமானவர்கள் தற்போதைய சூழலுக்கு ஏற்றாற்போல மாறியுள்ளதாக, சர்வதேச செஞ்சிலுவை சங்கம், சர்வதேச செஞ்சிலுவை குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

'இலங்கையில் 5 மில்லியனுக்கும் அதிக மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது' | Tamil Leader | We Lead the Nation