Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

ஜெனிவாவில் இன்று நடைபெறவுள்ள 42ஆவது அமர்வில் இலங்கை நிலவரம் குறித்து பரிசீலனை

T

The Leader Desk

பிப்ரவரி 1, 2023 • 4:13 AM

ஜெனிவாவில் இன்று நடைபெறவுள்ள 42ஆவது அமர்வில் இலங்கை நிலவரம் குறித்து பரிசீலனை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உலகளாவிய காலமுறை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு பரிசீலனை செய்யவுள்ளது.
  • இல் முதல் தடவையாகவும், 2012இல் இரண்டாவது தடவையாகவும் 2017ல் மூன்றாவது தடவையாகவும் இலங்கை உட்பட அனைத்து உறுப்பு நாடுகளின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாக மதிப்பாய்வு செய்யப்பட்டன.
  • இந்நிலையில் நான்காவது சுழற்சியின் கீழ் 2022 டிசம்பர் 22 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மற்றும் 2017 நவம்பரில் உலகளாவிய காலமுறை தொடர்பான குழுவால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று ஆராயப்படவுள்ளது.
  • இருப்பினும் இதே காலகட்டத்தில் 75வது சுதந்திரக் கொண்டாட்டங்கள் நடைபெறுவதால் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மீளாய்வுக்கான அறிக்கையை முன்னரே பதிவுசெய்யப்பட்ட வீடியோ அறிக்கை மூலம் சமர்பிக்கவுள்ளார்.
எழுத்து அளவு:

உலகளாவிய காலமுறை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு பரிசீலனை செய்யவுள்ளது.

2006ஆம் ஆண்டு ஐ.நா.சபையின் பொதுச் சபையால் நிறுவப்பட்ட உலகளாவிய காலமுறை தொடர்பான மதிப்பாய்வு குழுவினால், ஒவ்வொரு உறுப்பு நாடும் நான்கரை ஆண்டுகளுக்கு ஒருமுறை மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது.

2008இல் முதல் தடவையாகவும், 2012இல் இரண்டாவது தடவையாகவும் 2017ல் மூன்றாவது தடவையாகவும் இலங்கை உட்பட அனைத்து உறுப்பு நாடுகளின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாக மதிப்பாய்வு செய்யப்பட்டன.

இந்நிலையில் நான்காவது சுழற்சியின் கீழ் 2022 டிசம்பர் 22 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மற்றும் 2017 நவம்பரில் உலகளாவிய காலமுறை தொடர்பான குழுவால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று ஆராயப்படவுள்ளது.

அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினரின் விரிவான ஆலோசனைகளின் பின்னர் வெளிவிவகார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் தேசிய அறிக்கை தயாரிக்கும் செயல்முறை மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும் இதே காலகட்டத்தில் 75வது சுதந்திரக் கொண்டாட்டங்கள் நடைபெறுவதால் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மீளாய்வுக்கான அறிக்கையை முன்னரே பதிவுசெய்யப்பட்ட வீடியோ அறிக்கை மூலம் சமர்பிக்கவுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஜெனிவாவில் இன்று நடைபெறவுள்ள 42ஆவது அமர்வில் இலங்கை நிலவரம் குறித்து பரிசீலனை | Tamil Leader | We Lead the Nation