Tamil Leader News
முக்கியம்
பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●அவுஸ்திரேலிய கமநலத்துறைக்கு சிரிப்பைக் கொண்டுவந்த யோத உலர்திராட்சைப் பிரதிமை●ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●
செய்திகள்

4 மாகாணங்களில் வைத்தியர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டம்

T

The Leader Desk

மார்ச் 13, 2023 • 2:37 AM

4 மாகாணங்களில் வைத்தியர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.
  • அதன் ஆரம்ப கட்டமாக இன்று மேற்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மத்திய ஆகிய 04 மாகாணங்களில் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
  • கடந்த 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்திற்கு உரிய தீர்வு கிடைக்காவிடின் இன்று முதல் நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் என அந்த சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னஹக்க தெரிவித்துள்ளார்.
  • https://tamilleader.lk/news/7114-2023-03-12-15-38-59 வாகனங்களின் விலை குறையுமா?
எழுத்து அளவு:

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.

அதன் ஆரம்ப கட்டமாக இன்று மேற்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மத்திய ஆகிய 04 மாகாணங்களில் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

பணிப்புறக்கணிப்பு இடம்பெறும் நான்கு மாகாணங்களிலும் அமைந்துள்ள வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சை சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து சேவைகளும் தடைபடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, புதிய வரித் திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் ஏற்கனவே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.

கடந்த 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்திற்கு உரிய தீர்வு கிடைக்காவிடின் இன்று முதல் நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் என அந்த சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னஹக்க தெரிவித்துள்ளார்.

புதிய வரி திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, துறைமுக ஊழியர்கள் இன்று முதல் மெதுவான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். துறைமுக பொது முற்போக்கு தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷியாமல் சுமனரத்ன, மெதுவாக வேலை செய்யும் தொழில்சார் நடவடிக்கை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது குறித்து கருத்து வெளியிட்டார்.

இதேவேளை, அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஊழியர்களும் இன்று சில கடமைகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர் என்று, நீர் வழங்கல் தொழிற்சங்கங்களின் கூட்டுக் கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் பொறியியலாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்தார்.

https://tamilleader.lk/news/7114-2023-03-12-15-38-59

வாகனங்களின் விலை குறையுமா?

விபரம்:  https://tamilleader.lk/news/7114-2023-03-12-15-38-59

Facebook: https://www.facebook.com/profile.php?id=100037509187400

YouTube: https://www.youtube.com/@TheLeaderTV

மேலும் பல செய்திகளை பெற்றுக்கொள்ள எங்களுடைய Whatsapp குழுவில் இப்பொழுதே இணைந்து கொள்ளுங்கள்

https://chat.whatsapp.com/DDOqYGvOhPq3hX0ZAOU3Ki

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...