Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

குருணாகல் நகர எல்லையில் புகுந்த காட்டு யானைகள் தாக்குதல்: இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 31, 2026 • 2:34 PM

குருணாகல் நகர எல்லையில் புகுந்த காட்டு யானைகள் தாக்குதல்: இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உயந்தன–கோவான கிராமத்திற்குள் புகுந்த 3 காட்டு யானைகளை விரட்டக் கூட்டு நடவடிக்கை.
  • குருணாகல் நகரத்திற்கு அருகிலுள்ள உயந்தன–கோவான பகுதிக்குள் இன்று (31) அதிகாலை 3 காட்டு யானைகள் புகுந்ததால் ஏற்பட்ட பரபரப்பான சூழலில், இருவர் யானைத் தாக்குதலுக்கு இலக்காகிக் குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • அதிகாலையில் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகளில் ஒன்று, வீட்டின் கிணற்றடியில் குளித்துக் கொண்டிருந்த 45 வயதுடைய பெண்ணைத் தள்ளிவிட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது.
  • இதன்போது அதிர்ச்சியடைந்த கிராமமக்கள் யானைகளை விரட்ட முயன்ற போது, மற்றொரு நபரும் யானையின் தாக்குதலுக்கு இலக்கானதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எழுத்து அளவு:
  • உயந்தன–கோவான கிராமத்திற்குள் புகுந்த 3 காட்டு யானைகளை விரட்டக் கூட்டு நடவடிக்கை.

  • யானைகளின் தாக்குதலுக்கு இலக்கான இருவர் குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதி.

  • நகர்ப்புறங்களை நோக்கி விரிவடையும் மனித-யானை மோதல் குறித்துச் சூழலியலாளர்கள் கவலை.

குருணாகல் நகரத்திற்கு அருகிலுள்ள உயந்தன–கோவான பகுதிக்குள் இன்று (31) அதிகாலை 3 காட்டு யானைகள் புகுந்ததால் ஏற்பட்ட பரபரப்பான சூழலில், இருவர் யானைத் தாக்குதலுக்கு இலக்காகிக் குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வழக்கமாக யானைகளின் நடமாட்டம் இல்லாத அரை-நகர்ப்புறப் பகுதிக்குள் இவ்வாறு காட்டு யானைகள் புகுந்ததால் அப்பகுதி மக்களிடையே கடும் அச்சமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

அதிகாலையில் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகளில் ஒன்று, வீட்டின் கிணற்றடியில் குளித்துக் கொண்டிருந்த 45 வயதுடைய பெண்ணைத் தள்ளிவிட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதன்போது அதிர்ச்சியடைந்த கிராமமக்கள் யானைகளை விரட்ட முயன்ற போது, மற்றொரு நபரும் யானையின் தாக்குதலுக்கு இலக்கானதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். காயமடைந்த இருவரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கோரிக்கை

இச்சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த அசம்பாவித மேலாண்மைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் விராஜ் திசாநாயக்க, உயந்தன பகுதி யானை மோதல்கள் வழக்கமாக நடைபெறும் இடமல்ல என்பதால், பொதுமக்கள் பதற்றமடைந்து யானைகளைத் துரத்தவோ விரட்டவோ முயல்வது நிலைமையை மேலும் தீவிரமாக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே, வனவிலங்குத் திணைக்களம் மற்றும் பாதுகாப்புப் படையினர் தலையிடும் வரை பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

காட்டு யான பாதுகாப்பாக மீட்புச் செய்து பொருத்தமான காட்டுப் பகுதிக்குள் அனுப்புவதற்காக மல்லவப்பிட்டிய பிரதேச செயலகம், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம், தொரட்டியாவ பொலிஸ் மற்றும் இலங்கை இராணுவம் இணைந்து கூட்டு நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளன.

அரை-நகர்ப்புறப் பகுதிகளில் அதிகரிக்கும் ஆபத்து

மல்லவப்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட உயந்தன பகுதி, குருணாகல்–கண்டி பிரதான வீதிக்கு அருகில் அமைந்துள்ள அடர்ந்த மக்கள் தொகையும் அதிக வாகனப் போக்குவரத்தும் கொண்ட நகரமயமாக்கப்பட்ட பகுதியாகும். இவ்வாறான அதிக மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிக்குள் காட்டு யானைகள் வருவது மனித உயிர்களுக்கும் யானைகளின் வாழ்விற்கும் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

பாரம்பரியமாக வரண்ட மண்டலக் கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களில் காணப்படும் மனித-யானை மோதல், வாழிடங்கள் துண்டாடப்படுதல் மற்றும் பயணப் பாதைகள் அடைக்கப்படுதல் காரணமாகப் படிப்படியாக நகர்ப்புற மற்றும் அரை-நகர்ப்புற எல்லைகளை நோக்கி விரிவடையும் போக்கைக் காட்டுவதாகச் சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சர்வதேசப் போக்கும் யானைப் பாதுகாப்பும்

இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) ஆசிய யானைகள் விசேட நிபுணர் குழுவின் (AsESG) தரவுகளின்படி, ஆசிய பிராந்திய நாடுகளில் காட்டு யானைகளின் இயற்கை வாழிடங்களைச் சுற்றி இடம்பெறும் அதிவேக உட்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் வீதி வலைப்பின்னல் விரிவாக்கம் காரணமாக, யானைகள் தமது இயல்பு நடத்தையிலிருந்து விலகி எதிர்பாராத பகுதிகளுக்கு இடம்பெயரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

திடீரென நகர்ப்புறங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டும் போது, சரியான வழிகாட்டலின்றி பொதுமக்கள் நேரடியாக ஈடுபடுவது இருதரப்பிற்கும் ஆபத்தானது என்பதால், அறிவியல் முறைகள் மற்றும் நிபுணர் குழுக்களின் தலையீடு அத்தியாவசியமானது என வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

குருணாகல் நகர எல்லையில் புகுந்த காட்டு யானைகள் தாக்குதல்: இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில்! | Tamil Leader | We Lead the Nation