Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

தேசியப் பட்டியல் விவகாரம்: உண்மைக்குப் புறம்பான புரளிகள்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 31, 2026 • 2:30 PM

தேசியப் பட்டியல் விவகாரம்: உண்மைக்குப் புறம்பான புரளிகள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஞாயிற்றுக்கிழமை முற்பகல் நடைபெற்ற பிரஸ்தாப உயர்பீடக் கூட்டத்தில் சமகால அரசியல் கள நிலைவரம், கட்சியின் புனரமைப்பு நடவடிக்கைகள், மறைந்த ஸ்தாபகத் தலைவர் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம்.
  • அஷ்ரப் அவர்களின் 26 ஆவது நினைவு தின நிகழ்வு,பேராளர் மாநாடு என்பன பற்றியே கலந்துரையாடப்பட்டதாகவும்,கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பற்றி அதில் பேசப்படவில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
எழுத்து அளவு:

ஞாயிற்றுக்கிழமை(30) நடைபெற்ற உயர்பீட கூட்டத்தில் கட்சியின் தேசிய பட்டியல் விவகாரம் பற்றி ஆராயப்பட்டதாகவும், அதுபற்றி வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டு, விஷமத்தனமான வதந்திகள் பொறுப்பற்ற விதத்தில் சில சமூக வலைத்தளங்களாலும், தனிப்பட்ட நபர்களாலும்,பரப்பப்பட்டும், பகிரப்பட்டும் வருவதையிட்டு விசனம் தெரிவித்த கட்சியின் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவற்றிற்காக அலட்டிக் கொள்ளப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை முற்பகல் நடைபெற்ற பிரஸ்தாப
உயர்பீடக் கூட்டத்தில் சமகால அரசியல் கள நிலைவரம், கட்சியின் புனரமைப்பு நடவடிக்கைகள், மறைந்த ஸ்தாபகத் தலைவர் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 26 ஆவது நினைவு தின நிகழ்வு,பேராளர் மாநாடு என்பன பற்றியே கலந்துரையாடப்பட்டதாகவும்,கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பற்றி அதில் பேசப்படவில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

காழ்ப்புணர்ச்சியின் காரணமாக,மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயத்தை தோற்றுவிக்கும் சுயநல நோக்கோடு, அவ்வாறு சில சமூக வலைத்தளங்களாலும் ,தனி மனிதர்களாலும் புனையப்பட்டு, பகிரப்படும் புரளிகளையும்,வதந்திகளையும் அறவே நம்ப வேண்டாம் எனவும், தேசிய பட்டியல் உறுப்பினர் பதவி தொடர்பில் சரியான முடிவு உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படும் எனவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...