ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ ஆகியோர் நீதிமன்றத்திலிருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமை, கடமை தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ ஆகியோருக்குக் கொழும்பு நிரந்தர மூவர் கொண்ட மேல் நீதிமன்றத்தின் பெரும்பான்மை நீதிபதிகள் இன்று (31) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தனர்.


