Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் டொலர்!

T

The Leader Desk

ஜூலை 31, 2026 • 5:34 AM

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் டொலர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு மத்தியில், இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பலப்படுத்துவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தீர்மானித்துள்ளது.
  • அவற்றில் 100 மில்லியன் அமெரிக்க டொலர், மத்திய கிழக்கு நெருக்கடியினால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தத்தைக் குறைப்பதற்காகக் கூடுதல் நிதி உதவியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அத்துடன், இலங்கையில் வேலைவாய்ப்புகளை விரிவாக்குதல், புதிய முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் வர்த்தகத்தை ஊக்குவித்தல் என்பன இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் அடங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
  • இதனிடையே, மத்திய கிழக்கு மோதலின் பொருளாதாரப் பாதிப்புகளால் அதிகரிக்கும் செலவுகள் மற்றும் நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்வதற்காக இலங்கை மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு ஒட்டுமொத்தமாக 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது.
எழுத்து அளவு:

ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு மத்தியில், இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பலப்படுத்துவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தீர்மானித்துள்ளது.

இந்த நிதியுதவியானது இலங்கையின் வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட கொள்கைக் கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது.

அவற்றில் 100 மில்லியன் அமெரிக்க டொலர், மத்திய கிழக்கு நெருக்கடியினால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தத்தைக் குறைப்பதற்காகக் கூடுதல் நிதி உதவியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

"தொலைதூர மோதல் ஒன்றின் பாதிப்பு காரணமாக எந்தவொரு குடும்பமும் மேலும் வறுமைக்குள் தள்ளப்படக் கூடாது" என ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாடோ கண்டா (Masato Kanda) குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கையில் வேலைவாய்ப்புகளை விரிவாக்குதல், புதிய முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் வர்த்தகத்தை ஊக்குவித்தல் என்பன இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் அடங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் வர்த்தக அமைப்புகளை நவீனமயமாக்கல், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முயற்சியாண்மைகளின் (SME) போட்டித்தன்மையை உயர்த்துதல், பொருளாதார மண்டலங்களுக்கு முதலீடுகளைக் கொண்டு வருதல் மற்றும் ஏற்றுமதியை அதிகரித்தல் போன்ற பல சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இந்தச் சீர்திருத்தங்கள் மூலம், எதிர்காலத்தில் வரக்கூடிய வெளிப்புற பொருளாதார அதிர்ச்சிகளை இலங்கை எதிர்கொள்ளும் திறன் மேலும் பலப்படுத்தப்படும் என ஆசிய அபிவிருத்தி வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே, மத்திய கிழக்கு மோதலின் பொருளாதாரப் பாதிப்புகளால் அதிகரிக்கும் செலவுகள் மற்றும் நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்வதற்காக இலங்கை மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு ஒட்டுமொத்தமாக 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது. இதற்கமைய, கம்போடியாவிற்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...