Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

13 நாட்டைப் பிரிக்கும் எனப் பதறுவது வெட்கக்கேடு; விமல், வீரசேகரவுக்கு ரணில் சாட்டையடி

T

The Leader Desk

ஜனவரி 31, 2023 • 3:04 AM

13 நாட்டைப் பிரிக்கும் எனப் பதறுவது வெட்கக்கேடு; விமல், வீரசேகரவுக்கு ரணில் சாட்டையடி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தூக்குவோர் முதலில் அந்தத் திருத்தச் சட்டத்திலுள்ள பரிந்துரைகளை வாசித்துப் பார்க்க வேண்டும்.
  • அதைவிடுத்து 13 ஆவது திருத்தம் முழுமை பெற்றால் நாடு பிளவுபடும் என்று பதறியடிப்பது வெட்கக்கேடானது" என்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, காலைக்கதிர் பத்திரிகையிடம் தெரிவித்தார்.
  • மேற்படி விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி தெரிவித்ததாவது:- "அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தால் நாட்டுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
  • மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் கட்டாயம் அதனை வாசிக்க வேண்டும்.
எழுத்து அளவு:

தூக்குவோர் முதலில் அந்தத் திருத்தச் சட்டத்திலுள்ள பரிந்துரைகளை வாசித்துப் பார்க்க வேண்டும். அதைவிடுத்து 13 ஆவது திருத்தம் முழுமை பெற்றால் நாடு பிளவுபடும் என்று பதறியடிப்பது வெட்கக்கேடானது" என்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, காலைக்கதிர் பத்திரிகையிடம் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையைப் பயன்படுத்தி 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவேன் என்று கடந்த வாரம் நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்த கருத்துக்கு எதிராக தெற்கில் உள்ள கடும்போக்குவாத அரசியல்வாதிகளான விமல் வீரவன்ச, சரத் வீரசேகர உள்ளிட்டவர்கள் கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.

மேற்படி விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி தெரிவித்ததாவது:-

"அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தால் நாட்டுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அதை முழுமையாக நடைமுறைப்படுத்துவதால் நாடு ஒருபோதும் பிளவுபடாது.

இந்தச் சட்டம் முழுமையாக நிறைவேற்றப்படக்கூடாது என்று போர்க்கொடி தூக்குவோர் முதலில் அந்தத் திருத்தச் சட்டத்திலுள்ள பரிந்துரைகளை வாசித்துப் பார்க்கவேண்டும். மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் கட்டாயம் அதனை வாசிக்க வேண்டும்.

அதைவிடுத்து இந்தச் திருத்தச் சட்டம் முழுமை பெற்றால் நாடு பிளவுபடும் என்று பதறியடிப்பது வெட்கக்கேடானது.

மொட்டுக் கட்சியைச் சேர்ந்த ஒருவர், இருவர் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கருத்துக்களை வெளியிடுவதால் ஒட்டுமொத்த மொட்டுக் கட்சியுமே 13 இற்கு எதிர் என்று எவரும் தப்புக்கணக்குப் போடக்கூடாது.

13ஐ விமர்சிப்போர் தாராளமாக விமர்சிக்கட்டும். ஒவ்வொரு விமர்சனங்களுக்கும் என்னிடம் பதில்கள் உண்டு" - என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...