Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் 31ம் திகதி கண்டியில் வெளியிடப்படும் : முதல் பிரதி மகாநாயக்க தேரர்களுக்கு - மங்கள

T

The Leader Desk

அக்டோபர் 28, 2019 • 6:26 PM

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் 31ம் திகதி கண்டியில் வெளியிடப்படும் :  முதல் பிரதி மகாநாயக்க தேரர்களுக்கு - மங்கள

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இடம்பெறும் வைபவத்தின் போது வெளியிடப்பட உள்ளதாக தோ்தல் கொள்கை பிரகடண வரைபுக் குழுவின் பிரதானி நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
  • இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் மங்கள சமரவீர, இம்முறை 2015ம் ஆண்டை விட அனேக முற்போக்கான, ஆக்கபூர்வமான மற்றும் நாட்டு இளைஞர்களது பெண்களது மற்றும் நாட்டு மக்களின் எதிர்காலம் தொடர்பில் அவதானத்துடன் பார்க்கும் தேர்தல் கொள்கைப் பிரகடணம் ஒன்றை வெளியிடுவோம் என்றும் கூறினார்.
  • ம் ஆண்டிலும் ஒன்றை வெளியிட்டார்கள்.
எழுத்து அளவு:

இடம்பெறும் வைபவத்தின் போது வெளியிடப்பட உள்ளதாக தோ்தல் கொள்கை பிரகடண வரைபுக் குழுவின் பிரதானி நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

அமைச்சர் சஜித் பிரேமதாசாவினால் அன்றைய தினம் மல்வத்து - அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களுக்கு கொள்கைப் பிரகடணத்தின் முதல் பிரதிகள் வழங்கி வைக்கப்படும்.  இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் மங்கள சமரவீர, இம்முறை 2015ம் ஆண்டை விட அனேக முற்போக்கான, ஆக்கபூர்வமான மற்றும் நாட்டு இளைஞர்களது பெண்களது மற்றும் நாட்டு மக்களின் எதிர்காலம் தொடர்பில் அவதானத்துடன் பார்க்கும் தேர்தல் கொள்கைப் பிரகடணம் ஒன்றை வெளியிடுவோம் என்றும் கூறினார்.

ராஜபக்ஷக்களின் விசித்திரக் கதைகளைப் போன்றில்லாமல், நாம் இம்முறையும் சொல்வதைச் செய்வோம்.

“நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை அடுத்த வியாழக்கிழமை கண்டியில் வைத்து வெளியிடுகின்றோம். எமது தேர்தல் விஞ்ஞாபனம் ராஜபக்ஷக்களிள் விஞ்ஞானம் போன்றதல்ல. நான் இப்போது பேசுவது ராஜபக்ஷக்கள் சில தினங்களுக்கு முன்னா் வெளியிட்டதைப் பற்றி மாத்திரமல்ல. 2005ம் ஆண்டிலும் புதிய நாடு என்று ஒன்றை வெளியிட்டார்கள். 2010ம் ஆண்டிலும் ஒன்றை வெளியிட்டார்கள்.  ஆனால் அவர்கள் செய்தது இந்த அனைத்து கொள்கை பிரகடணத்திலும் கூறப்பட்ட விடயங்களையல்ல. சொல்வது ஒன்று, செய்தது ஒன்று. 2005ம் ஆண்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினை ஒழிப்பதாகக் கூறினார்கள். அது மாத்திரமல்ல, பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார்கள். சம்பளத்தை அதிகரிப்பதாகச் சொன்னார்கள். போஷாக்கு பொதியை வழங்குவதாகச் சொன்னார்கள்.

இவ்வாறு ஏராளமான வாக்குறுதிகளை வழங்கிய போதிலும், மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய வாக்குறுதிகளுக்கு பதிலாக அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் அவர்களது சிந்தனையில் இருப்பது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான சர்வாதிகார தன்மையினை உறுதிப்படுத்தி தமது குடும்ப ஆதிக்கத்தை பலப்படுத்துவதே தவிற வழங்கிய வாக்குறுதிகள் அல்ல என்பதை என்னால் நிறூபிக்க முடியும்.

அதே போன்று இம்முறையும் விசித்திரக் கதைகளையே இம்முறையும் கூறியிருக்கின்றார்கள் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...