விசாரணை நீதிமன்றத்தில் இடம்பெற்ற போது சாட்சியமளித்த அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி, மறைந்த பொலிஸ் மா அதிபர் தனது கடமை நேர ஆயுதத்தைப் பரிசோதிக்க வேண்டும் எனக் கூறித் தன்னிடம் பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
கடுவலை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (28) சாட்சியமளித்த பொலிஸ் சாஜன்ட் சுசந்த (697), மறைந்த திரு. விக்ரமரத்ன இதற்கு முன்னர் ஒருபோதும் தனது கடமை நேர ஆயுதத்தைக் கேட்டதில்லை என்பதால் இது அசாதாரணமான ஒன்றாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.
மேல் மாகாண (தெற்கு) புலனாய்வுப் பிரிவினர் இந்த மரண விசாரணையில் சாட்சியங்களை வழிநடத்தினர்.
"நான் முன்னாள் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக (PSO) 16 ஆண்டுகளுக்கும் மேலாகச் சேவையாற்றியுள்ளேன். ஆனால் அவர் ஒருபோதும் எனது கடமை நேர ஆயுதத்தைப் பரிசோதிப்பதற்காகக் கேட்டதில்லை. இருப்பினும், சம்பவம் நடந்த அன்று அவர் எனது கடமை நேர ஆயுதத்தைக் கேட்டார், ஆயுதத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் தோட்டா்களையும் கேட்டார். அவர் உடற்பயிற்சிக்காக வெளியே செல்லும் போதெல்லாம் காலணிகளை அணிவார், ஆனால் அந்தத் துரதிர்ஷ்டவசமான நாளில் அவர் காலணிகளை அணிந்திருக்கவில்லை. அத்துடன் உடற்பயிற்சிக்குச் செல்லும்போது அவர் ஒருபோதும் தண்ணீர் போத்தல்களை எடுத்துச் செல்வதில்லை. நான் அவரிடம் கைத்துப்பாக்கியையும் தோட்டாக்களையும் கொடுத்த பின்னர், எனக்கு ஒரு போத்தல் தண்ணீர் கொண்டு வருமாறு கூறினார். நான் வெளியில் சென்ற கணமே, கைத்துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டது. நான் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அவர் தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டேன். வீட்டிலிருந்த மற்றவர்களின் உதவியுடன் அவரை உடனடியாக முல்லேரியா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றேன். பின்னர் அவர் உயிரிழந்துவிட்டதாக அறிந்துகொண்டேன்" எனச் சாஜன்ட் சுசந்த மேலும் சாட்சியமளித்தார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய கைத்துப்பாக்கி மற்றும் பயன்படுத்தப்பட்ட தோட்டாக்களை அறிக்கைக்காக அரசாங்க பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பிக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மரணம் தொடர்பில் முல்லேரியா ஆதார வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி (JMO) திறந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.


