Tamil Leader News
முக்கியம்
பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●அவுஸ்திரேலிய கமநலத்துறைக்கு சிரிப்பைக் கொண்டுவந்த யோத உலர்திராட்சைப் பிரதிமை●ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●
செய்திகள்

7 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள அறிக்கை: திசைகாட்டி வெளியிடவில்லை என ஐ.நா அம்பலம்!

T

The Leader Desk

ஜூன் 30, 2026 • 8:21 AM

7 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள அறிக்கை: திசைகாட்டி வெளியிடவில்லை என ஐ.நா அம்பலம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நிலவரங்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக, ஏழு வருடங்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபையினால் வழங்கப்பட்ட இரகசிய அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தவறியுள்ளமை அம்பலமாகியுள்ளது.
  • வசித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட தூதுக்குழுவினர், இலங்கைக்கு மேற்கொண்ட 10 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தின் நிறைவிலேயே இந்த அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளனர்.
  • கடந்த ஜூன் 14ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்த ஐநா தூதுக்குழுவினர், சிறைச்சாலைகள், பொலிஸ் நிலையங்கள், விளக்கமறியல் நிலையங்கள், புனர்வாழ்வு முகாம்கள் உள்ளிட்ட பல தடுப்புக்காவல் நிலையங்களுக்கு எவ்வித முன்னறிவித்தலுமின்றி திடீர் விஜயங்களை மேற்கொண்டிருந்தனர்.
  • இருப்பினும், காவலில் ஏற்படும் மரணங்கள் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் குறித்து இந்த உபகுழுவின் அறிக்கையில் அதிகம் கவனம் செலுத்தப்படாத போதிலும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயல்திறன் குறித்து அவர்கள் அதிருப்தியையே வெளியிட்டுள்ளனர்.
எழுத்து அளவு:

நிலவரங்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக, ஏழு வருடங்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபையினால் வழங்கப்பட்ட இரகசிய அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தவறியுள்ளமை அம்பலமாகியுள்ளது.

வசித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட தூதுக்குழுவினர், இலங்கைக்கு மேற்கொண்ட 10 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தின் நிறைவிலேயே இந்த அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளனர்.

நீதிமன்ற விசாரணைகளுக்கு முன்னர் நீண்டகாலம் தடுத்து வைக்கப்படுகின்றமை, சிறைச்சாலைகளில் நிலவும் அதிக நெரிசல் மற்றும் தடுப்புக்காவல் நிலையங்களில் காணப்படும் குறைபாடுகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள இந்த உபகுழு, சித்திரவதைகளைத் தடுப்பதற்கான தேசிய பொறிமுறையை (NPM) வலுப்படுத்துமாறு ஜெனிவாவிலிருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

சித்திரவதைகளைத் தடுப்பதற்காக இலங்கையில் நிறுவப்பட்டுள்ள தேசிய பொறிமுறை நிறுவனமாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு காணப்படுகிறது.

"எமது முதலாவது விஜயம் இடம்பெற்று ஏழு வருடங்களுக்கும் மேலாகியுள்ள போதிலும், எம்மால் ஏற்கனவே வழங்கப்பட்ட பல பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதன் காரணமாகவே, சுதந்திரம் பறிக்கப்பட்ட மக்கள் தாங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளில் எவ்வித முன்னேற்றத்தையும் இன்னும் காணவில்லை"

என சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐநா உபகுழுவின் தலைவி ஆயிஷா ஷுஜுனே முஹம்மது (Aisha Shujune Muhammad) தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 14ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்த ஐநா தூதுக்குழுவினர், சிறைச்சாலைகள், பொலிஸ் நிலையங்கள், விளக்கமறியல் நிலையங்கள், புனர்வாழ்வு முகாம்கள் உள்ளிட்ட பல தடுப்புக்காவல் நிலையங்களுக்கு எவ்வித முன்னறிவித்தலுமின்றி திடீர் விஜயங்களை மேற்கொண்டிருந்தனர்.

அத்துடன், அரச அதிகாரிகள், தேசிய பொறிமுறை (NPM) உறுப்பினர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் ஏனைய ஐநா முகவர் நிலையங்களின் அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த உபகுழுவின் விஜயத்தின் ஆரம்பத்தில், கொழும்பில் அவர்களைச் சந்தித்த நாட்டின் முன்னணி மனித உரிமை அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள், இலங்கையின் சிறைச்சாலைகள் மற்றும் தடுப்பு நிலையங்களின் அவல நிலை, பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் காவலில் இடம்பெறும் மரணங்கள் உள்ளிட்ட சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் மற்றும் அரச மனித உரிமை நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து உபகுழுவிற்கு விரிவான தகவல்களை வழங்கியிருந்தனர்.

இருப்பினும், காவலில் ஏற்படும் மரணங்கள் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் குறித்து இந்த உபகுழுவின் அறிக்கையில் அதிகம் கவனம் செலுத்தப்படாத போதிலும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயல்திறன் குறித்து அவர்கள் அதிருப்தியையே வெளியிட்டுள்ளனர்.

"சுயாதீனமான, போதுமான வளங்களைக் கொண்ட மற்றும் திறம்பட செயற்படும் ஒரு தேசிய பொறிமுறையானது சித்திரவதைகள் மற்றும் கொடுமைகளைத் தடுப்பதற்கு இன்றியமையாததாகும். வெறும் பெயரளவில் மாத்திரம் தங்கிவிடாமல், அதன் சுயாதீனம், செயல்திறன் மற்றும் செயல்பாட்டுத் திறனைத் தொடர்ந்து உறுதிப்படுத்துவது, சித்திரவதைகள் மற்றும் பிற கொடூரமான, மனிதநேயமற்ற அல்லது அவமதிப்பான நடாத்துகை அல்லது தண்டனைக்கு எதிரான உடன்படிக்கையின் (OPCAT) கீழான ஒரு கடப்பாடாகும்"

என உபகுழுவின் தலைவி முஹம்மது நினைவூட்டியுள்ளார்.

இலங்கை, சித்திரவதைகளுக்கு எதிரான ஐநா உடன்படிக்கையின் இந்த விருப்பார்ந்த நெறிமுறையை (OPCAT) 2017 டிசம்பர் 5ஆம் திகதி ஏற்றுக்கொண்டது.

இலங்கை விஜயத்தின் பின்னர், தமது பரிந்துரைகளை உள்ளடக்கிய இரகசிய அறிக்கையை தற்போதைய தேசிய மக்கள் சக்தி (மாலிமாவ) அரசாங்கத்திடம் ஒப்படைக்கவுள்ள ஐ.நா உபகுழு, இந்த அறிக்கையையும், இதற்கு முன்னர் நல்லாட்சி அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட அறிக்கையையும் பகிரங்கப்படுத்துமாறு கோரியுள்ளது.

இது வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதுடன், சித்திரவதைகளை ஒழிப்பதற்கான மக்கள் கலந்துரையாடலை கட்டியெழுப்ப ஊக்கமளிக்கும் என உபகுழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...