Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 30 பேர் கைது!

T

The Leader Desk

மார்ச் 21, 2020 • 10:59 AM

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில்  இதுவரை 30 பேர் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதேவேளை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதில் இருந்து தற்போது வரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
  • தம்புள்ளை பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் மற்றும் மூன்று மோட்டார் சைக்கள்களில் பயணம் செய்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • வலஸ்முல்லை நகரத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறி வலஸ்முல்லை நகரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • நல்லதண்ணி, சிவனொளிபாதமலை வீதியில் மோட்டார் வாகனத்தில் பயணித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்போது உணவகம் ஒன்றை திறந்தது தொடர்பில் அப்புத்தளை பிரதேசத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எழுத்து அளவு:

இதேவேளை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதில் இருந்து தற்போது வரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளை, பண்டாரவளை, ஹப்புத்தளை, தங்காலை, கட்டுநாயக்க, வலஸ்முல்ல, நல்லதண்ணி மற்றும் அம்பாறை ஆகிய பிரதேசங்களில் நேற்று இரவு மற்றும் இன்று காலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தம்புள்ளை பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் மற்றும் மூன்று மோட்டார் சைக்கள்களில் பயணம் செய்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்டாரவளையில் மதுபானம் அருந்தி மைதானத்தில் ஒன்று கூடியிருந்த எட்டு பேர் பண்டாரவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வலஸ்முல்லை நகரத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறி வலஸ்முல்லை நகரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நல்லதண்ணி, சிவனொளிபாதமலை வீதியில் மோட்டார் வாகனத்தில் பயணித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்போது உணவகம் ஒன்றை திறந்தது தொடர்பில் அப்புத்தளை பிரதேசத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கட்டுநாயக்க நகரை அண்மித்த வீதியில் நடந்து சென்ற இரண்டு நபர்களும் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தங்காலை வீதியில் குடிபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் ஒருவரும் மற்றும் அம்பாறை பிரதேசத்தில் வீதியில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18 வயதுக்கும் 52 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படும் நிலையில் அவர்கள் தம்புள்ளை, பண்டாரவளை, தங்காலை. ஹட்டன் மற்றும் மினுவாங்கொடை ஆகிய நீதவான் நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலங்களில் அதனை மீறுபவர்களை கைது செய்வதற்காக தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 30 பேர் கைது! | Tamil Leader | We Lead the Nation