Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

'மனநோயாளிகளாக மாறியவர்களின் எண்ணிக்கை 30%ஆல் அதிகரிப்பு'

T

The Leader Desk

ஜனவரி 26, 2023 • 4:40 AM

'மனநோயாளிகளாக மாறியவர்களின் எண்ணிக்கை 30%ஆல் அதிகரிப்பு'   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வீதத்தால் அதிகரித்துள்ளது.
  • இந்த நாட்டில் தங்குவதற்கு எதிர்காலம் இல்லை என விரக்தியடைந்த இளைஞர்கள் மத்தியில் மனநோய்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
  • காலி - கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட மனநல மருத்துவர் ரூமி ரூபன் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

வீதத்தால் அதிகரித்துள்ளது.

காலி - கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட மனநல மருத்துவர் ரூமி ரூபன் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

பல்வேறு மனநோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் பொருளாதார பிரச்சினைகளால் மருந்துகளை உட்கொள்வதை நிறுத்தியதால் மீண்டும் மனநோய்கள் அதிகரித்து வைத்தியசாலையில் அனுமதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் தங்குவதற்கு எதிர்காலம் இல்லை என விரக்தியடைந்த இளைஞர்கள் மத்தியில் மனநோய்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடு செல்ல முடியாமல் மன உளைச்சலுக்கு உள்ளாகும் இளைஞர்களிடையே மனநலப் பிரச்சினைகள் அதிகம் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பலர் தங்கள் வெறுப்பை வெளிப்படுத்த சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதார பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை மன உளைச்சல் வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவித்த நிபுணர் வைத்தியர், கல்வி நடவடிக்கைகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் கணிசமானோர் மன உளைச்சலுக்கு ஆளாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...