Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

டியூஷன் ஆசிரியர்கள் உட்பட அனைவருக்கும் கற்பித்தல் 'லைசன்ஸ்' கட்டாயமாகிறது!

T

The Leader Desk

ஆகஸ்ட் 29, 2026 • 3:00 PM

டியூஷன் ஆசிரியர்கள் உட்பட அனைவருக்கும் கற்பித்தல் 'லைசன்ஸ்' கட்டாயமாகிறது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முனைவர் பட்டம் (PhD) பெற்ற ஆசிரியர்களுக்குப் பல்கலைக்கழக பேராசிரியர்களின் அடிப்படைச் சம்பளத்தை வழங்க நடவடிக்கை.
  • இதன்படி, குறித்த வகையைச் சேர்ந்த ஆசிரியருக்கும் பல்கலைக்கழகப் பேராசிரியருக்கும் இடையிலான சம்பள வேறுபாடு நிறுவனக் கொடுப்பனவுகளில் மட்டுமே காணப்படும் என்றும், அடிப்படைச் சம்பளம் சமமாக இருக்கும் என்றும் அமைச்சின் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
  • தனியார் பாடசாலைக் கட்டணங்களை முறைப்படுத்துதல் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை மட்டும் நியமிப்பது தொடர்பான புதிய சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி; விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு.
எழுத்து அளவு:
  • முனைவர் பட்டம் (PhD) பெற்ற ஆசிரியர்களுக்குப் பல்கலைக்கழக பேராசிரியர்களின் அடிப்படைச் சம்பளத்தை வழங்க நடவடிக்கை.

  • தனியார் பாடசாலைக் கட்டணங்களை முறைப்படுத்துதல் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை மட்டும் நியமிப்பது தொடர்பான புதிய சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி; விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு.

நாட்டின் ஒட்டுமொத்த பாடசாலைக் கட்டமைப்பின் தரத்தை உயர்த்துவதுடன், தரப்படுத்தப்பட்ட கல்வி முறையொன்றை நிறுவும் நோக்கில், தனியார் உபகார வகுப்புகளை (Tuition Classes) நடத்தும் ஆசிரியர்கள் உட்பட இலங்கையிலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் 'கற்பித்தல் உரிமம்' (Teaching License) கட்டாயமாக்கக் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

விரைவில் நிறுவப்படவுள்ள தேசிய கல்விக் குழுவின் (National Education Council) ஊடாக இந்த ஒழுங்குமுறை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இந்த உரிமத்தைப் பெறாத எந்தவொரு நநபரும் கல்வி அமைப்பினுள் உத்தியோகபூர்வ ஆசிரியராக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுள்ள இப்புதிய சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகக் கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

முனைவர் பட்டத்திற்குப் பல்கலைக்கழக மட்டச் சம்பளம்

திறமை மற்றும் உயர்தகமை கொண்ட நிபுணர்களைப் பாடசாலைக் கட்டமைப்பிற்குள் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில், முனைவர் பட்டம் (PhD) பெற்ற ஒரு ஆசிரியரின் அடிப்படைச் சம்பளத்தைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவரின் அடிப்படைச் சம்பளத்திற்குச் சமமான மட்டத்திற்குக் கொண்டுவரவும் இதில் யோசன முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த வகையைச் சேர்ந்த ஆசிரியருக்கும் பல்கலைக்கழகப் பேராசிரியருக்கும் இடையிலான சம்பள வேறுபாடு நிறுவனக் கொடுப்பனவுகளில் மட்டுமே காணப்படும் என்றும், அடிப்படைச் சம்பளம் சமமாக இருக்கும் என்றும் அமைச்சின் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இது தவிர, எதிர்காலத்தில் ஆசிரியர் சேவையில் பட்டதாரிகள் மட்டுமே இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தனியார் பாடசாலைக் கட்டணங்கள் முறைப்படுத்தப்படும்

இந்தப் புதிய சட்டத்தின் மூலம், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்க்கும் போதும் அவற்றை நடத்தும் போதும் அறவிடப்படும் பல்வேறு கட்டணங்கள் தொடர்பாகச் குறிப்பிட்ட தரநிலை மற்றும் கடுமையான கட்டுப்பாட்டுச் சட்டக் கட்டமைப்பு நிறுவப்படவுள்ளது.

ஆசிரியர், ஆசிரியர் ஆலோசகர், அதிபர், ஆசிரியர் கல்வியாளர் மற்றும் கல்வி நிர்வாகம் போன்ற பொதுக் கல்வியின் அனைத்து தொழில்முறைத் துறைகளையும் உள்ளடக்கியதாக நிறுவப்படும் இந்த தேசிய கல்விக் குழுவின் தலைவரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உரித்தாகும்.

சர்வதேசப் போக்கு மற்றும் எதிர்கால தொலைநோக்கு

சிங்கப்பூர், ஐக்கிய இராச்சியம், பின்லாந்து போன்ற உலகின் வளர்ந்த கல்வி அமைப்புகளைக் கொண்ட நாடுகளிலும் ஆசிரியர் தொழிலுக்குக் குறிப்பிட்ட காலத்திற்குட்பட்ட தொழில்முறை உரிம முறைகள் (Professional Licensing & CPD) அமுலில் உள்ளன.

இலங்கையிலும் இதுவரை நிலவி வந்த தளர்த்தப்பட்ட நடைமுறைகளுக்குப் பதிலாக, ஆசிரியர்களின் ஆளுமை மற்றும் தொழில்முறைத் திறனை உயர்த்துவதற்கான ஒரு படியாக இந்த சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகக் கல்வித் துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...