Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதலின் பின் காணாமல்போதல் மற்றும் சட்டவிரோத தடுத்துவைப்பு குறித்து CPRP முறைப்பாடு!

T

The Leader Desk

ஜூலை 29, 2026 • 5:28 AM

நீர்கொழும்பு சிறை மோதலின் பின் காணாமல்போதல் மற்றும் சட்டவிரோத தடுத்துவைப்பு குறித்து CPRP முறைப்பாடு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிணை வழங்கப்பட்ட கைதிகள் சிலர் சிறைச்சாலையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படாமல் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!
  • நாட்கள் கடந்தும் காணாமல்போன மூன்று கைதிகள் தொடர்பான தகவல்கள் வழங்கப்படாத நிலையில், வலுக்கட்டாயமாக காணாமல்போகச்செய்தல் தொடர்பான சட்டத்தின்கீழ் நடவடிக்கை!
  • இந்த தன்னிச்சையான தடுத்துவைப்புகள் மற்றும் தகவல்களை மறைத்தல் தொடர்பில் உடனடியாக நீதிமன்ற மற்றும் மனித உரிமைகள் தலையீடுகள் அவசியமானவை என்றும் CPRP அமைப்பு வலியுறுத்துகின்றது.
எழுத்து அளவு:

 

  • பிணை வழங்கப்பட்ட கைதிகள் சிலர் சிறைச்சாலையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படாமல் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!

  • 23 நாட்கள் கடந்தும் காணாமல்போன மூன்று கைதிகள் தொடர்பான தகவல்கள் வழங்கப்படாத நிலையில், வலுக்கட்டாயமாக காணாமல்போகச்செய்தல் தொடர்பான சட்டத்தின்கீழ் நடவடிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற கொடூரமான மோதல் சம்பவத்தின் பின்னர், நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட கைதிகள் சிலர் சிறைச்சாலை வளாகத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்படாமல் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளமைக்கும், காணாமல்போன மூன்று கைதிகள் குறித்து எவ்வித தகவல்களும் வழங்கப்படாமைக்கும் எதிராக சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு (CPRP), காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் (OMP) முறைப்பாடன்றைப் பதிவுசெய்துள்ளது.

தடுப்புக்காவலிலிருந்த மூன்று கைதிகள் குறித்து சம்பவம் நடந்து 23 நாட்கள் கடந்துள்ள போதிலும் எவ்வித தகவலையும் வழங்குவதற்கு அதிகாரிகள் தவறியுள்ள நிலையில், 2018 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க அனைத்து ஆட்களையும் வலுக்கட்டாயமாக காணாமல்போகச்செய்தலிலிருந்து பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாட்டின் சட்டத்தின்கீழ் CPRP அமைப்பினால் இம்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிணை பெற்ற கைதிகள் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் சிறு குற்றங்களுக்காக பிணை வழங்கப்பட்ட பல கைதிகள், சிறைச்சாலை வளாகத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்படாமல் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அவர்களின் குடும்ப உறவினர்களிடமிருந்து தகவல்கள் கிடைப்பதாக சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு சுட்டிக்காட்டுகின்றது.

புதிதாக பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகள் எதுவுமின்றி, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை மோதல்கள் தொடர்பான சாட்சியங்களை மறைப்பதற்காக அல்லது வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறு பிணை பெற்ற நபர்களைத் தடுத்துவைத்திருப்பது கடுமையான சட்ட மீறலாகும் என்றும், குறைந்தது 15 கைதிகளாவது இவ்வாறு சட்டவிரோதமாக இன்னமும் சிறைச்சாலைக்குள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவ்வமைப்பு குறிப்பிடுகின்றது.

காணாமல்போன கைதிகளும் OMP முறைப்பாடும்

அத்துடன், சிறைச்சாலை மோதலின் பின்னர் தடுப்புக்காவலிலிருந்த மூன்று கைதிகள் குறித்து அவர்களின் உறவினர்களுக்கு எவ்வித தகவல்களும் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கும் CPRP அமைப்பு, அவர்கள் தற்போது இருக்கும் இடம், அவர்களைச் சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்பு, அவர்களின் சுகாதார நிலை குறித்த விபரங்கள் மற்றும் இச்சம்பவம் தொடர்பாக சுயாதீன விசாரணையொன்றை முன்னெடுக்குமாறும் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திடம் (OMP) கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த தன்னிச்சையான தடுத்துவைப்புகள் மற்றும் தகவல்களை மறைத்தல் தொடர்பில் உடனடியாக நீதிமன்ற மற்றும் மனித உரிமைகள் தலையீடுகள் அவசியமானவை என்றும் CPRP அமைப்பு வலியுறுத்துகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நீர்கொழும்பு சிறை மோதலின் பின் காணாமல்போதல் மற்றும் சட்டவிரோத தடுத்துவைப்பு குறித்து CPRP முறைப்பாடு! | Tamil Leader | We Lead the Nation