தென்மேற்கு ஜப்பானைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்வடைந்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 7.1 அழகாகப் பதிவான இந்த நிலநடுக்கம் நேற்று (28) ஏற்பட்டது.
நிலநடுக்கம் காரணமாக வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டடங்களுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது வரை காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 10 க்கும் அதிகம் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஜப்பானின் மூன்றாவது பெரிய தீவாகக் கருதப்படும் கியூஷூ (Kyushu) தீவிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


