Tamil Leader News
முக்கியம்
பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●அவுஸ்திரேலிய கமநலத்துறைக்கு சிரிப்பைக் கொண்டுவந்த யோத உலர்திராட்சைப் பிரதிமை●ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●
செய்திகள்

சொத்து, பொறுப்பு விபரக் கூற்றுக்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் தினம் நாளை: தவறின் அபராதம்!

T

The Leader Desk

ஜூன் 29, 2026 • 4:01 PM

சொத்து, பொறுப்பு விபரக் கூற்றுக்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் தினம் நாளை: தவறின் அபராதம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இறுதித் தினம் வரை காத்திருக்காமல், விபரக் கூற்றுக்களை விரைவாகச் சமர்ப்பிக்குமாறும், தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏதேனும் ஏற்படின் முன்கூட்டியே அதற்கான உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் ஆணைக்குழு மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.
எழுத்து அளவு:

பொறுப்பு விபரக் கூற்றுக்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி நாளை (30) என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

  • நாளைக்குள்ளாக மின்னணு விபரக்கூற்று முறைமை (e-Declaration System) ஊடாகச் சமர்ப்பிப்பது கட்டாயம்

  • அரச சேவையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சிப் பண்புகளை வலுப்படுத்துவதே பிரதான நோக்கம்

  • 2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் விதிகளுக்கு அமைய, சொத்து மற்றும் பொறுப்பு விபரக் கூற்றுக்களை (Asset and Liability Declarations) சமர்ப்பிப்பதற்கான இறுதித் தினம் நாளை (30ஆம் திகதி) ஆகும் என இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு (CIABOC) அறிவித்துள்ளது.

    இதற்கமைய, 2026 ஜூன் 30ஆம் திகதியுடன் நிறைவடையும் காலப்பகுதிக்குள் சட்டப்பூர்வமாகத் தமது சொத்து மற்றும் பொறுப்பு விபரக் கூற்றுக்களைச் சமர்ப்பிக்கத் தவறும் அரச அதிகாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சட்ட விதிகளுக்கு அமைய அவர்களிடம் அபராதத் தொகை வசூலிக்கப்படும் எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

    இந்த வருடாந்த விபரக் கூற்றானது, மார்ச் 31ஆம் திகதி நிலவரப்படி தமக்குரிய சொத்துக்கள், பொறுப்புக்கள், வருமானம் மற்றும் அது சார்ந்த நிதி விபரங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட வேண்டும் என்பதுடன், அதனை 2026 ஜூன் 30ஆம் திகதிக்கு முன்னர் "மின்னணு சொத்து, பொறுப்பு விபரக்கூற்று முறைமை" (e-Declaration System) ஊடாகச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    புதிய நடைமுறையின் கீழ், இந்த விபரக் கூற்றுக்களைச் சமர்ப்பிக்கும் பணிகள் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள ஆணைக்குழு, விபரங்களை துல்லியமாகவும், நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள்ளும் வழங்குவது விபரக்கூற்றுச் சமர்ப்பிப்பிற்குப் பொறுப்பான அனைத்து அதிகாரிகளினதும் கடமையாகும் என வலியுறுத்தியுள்ளது.

    அரச சேவையின் வெளிப்படைத்தன்மை (Transparency), பொறுப்புக்கூறல் (Accountability) மற்றும் நல்லாட்சிப் பண்புகளை (Principles of Good Governance) வலுப்படுத்துவதற்காகவும், ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதையுமே முதன்மை நோக்கமாகக் கொண்டு 2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் விதிகளுக்கு அமைய இந்த புதிய ஒழுங்குமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

    இறுதித் தினம் வரை காத்திருக்காமல், விபரக் கூற்றுக்களை விரைவாகச் சமர்ப்பிக்குமாறும், தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏதேனும் ஏற்படின் முன்கூட்டியே அதற்கான உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் ஆணைக்குழு மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

    தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

    எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

    சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

    Tamil Leader • எங்களைப் பற்றி

    Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

    மேலும் வாசிக்க (Read More)→

    கலந்துரையாடல் (0)

    உரையாடலில் இணையுங்கள்

    கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

    கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...