Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

இலங்கையைக் பிராந்திய எரிபொருள் மையமாக மாற்றுவதில் தாமதம்!

T

The Leader Desk

ஜூலை 28, 2026 • 4:46 PM

இலங்கையைக் பிராந்திய எரிபொருள் மையமாக மாற்றுவதில் தாமதம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • (Lanka IOC PLC) நிறுவனத்தின் தலைவர் அனுஜ் ஜெயின் (Anuj Jain) தெரிவித்துள்ளார்.
  • தலைவர், பொருத்தமான உள்கட்டமைப்புகளைக் கட்டியெழுப்புவதன் மூலம் வெறும் எரிபொருளை இறக்குமதி செய்யும் ஒரு நாட்டிலிருந்து சர்வதேசக் கடல்சார் போக்குவரத்திற்குச் சேவைகளை வழங்கும் பிராந்தியச் சேமிப்பு, சுத்திகரிப்பு மற்றும் விநியோக மையமாக மாற முடியும் எனக் கூறினார்.
  • கொழும்பில் நடைபெற்ற லங்கா ஐ.
எழுத்து அளவு:
  • "புவியியல் அமைவிடம் மற்றும் திட்டமிடலில் நாம் முன்னிலையில் உள்ளபோதிலும், திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஆர்வமும் வேகமும் போதாது"

  • சுத்திகரிப்புத் திறன், பங்கரிங் வசதிகள் மற்றும் திருகோணமலை எண்ணெய்த் தாங்கித் தொகுதியின் முதலீடுகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தல்

பெட்ரோலிய உள்கட்டமைப்புகளுக்காக மேற்கொள்ளப்படும் தீர்மானமிக்க முதலீடுகள் ஊடாக இலங்கையைத் தெற்காசியாவின் மூலோபாய ஆற்றல் மையமாக (Energy Hub) மாற்றுவதற்கான முழுமையான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்ற போதிலும், பல வருடங்களாக இடம்பெற்று வரும் கலந்துரையாடல்களுக்கு அப்பால் அவற்றை நடைமுறையில் செயற்படுத்தத் தவறியமையே பிரதான தடையாகவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி. (Lanka IOC PLC) நிறுவனத்தின் தலைவர் அனுஜ் ஜெயின் (Anuj Jain) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். பிராந்திய ரீதியில் ஆற்றல்மிக்க சக்தியாக உருவெடுப்பதற்குத் தேவையான புவியியல் அமைவிடம், மூலோபாய ரீதியான இடம்பிரதிஷ்டை மற்றும் இத்துறைக்கான வழிகாட்டல் வரைபடம் என்பன இலங்கையிடம் ஏற்கனவே காணப்படுவதாகவும், எனினும், தொடர்ந்து தாமதமாகும் உள்கட்டமைப்புத் திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கான தீவிர அவசியம் நாட்டில் நிலவுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளும் இலங்கையின் வாய்ப்புகளும்

புவிசார் அரசியல் மோதல்கள், விநியோகச் சங்கிலி முறிவுகள் மற்றும் உலகளாவிய வர்த்தகப் பாதைகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக உலக எரிபொருள் சந்தை தீவிர ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துவரும் இச்சந்தர்ப்பத்தில், முற்றாக இறக்குமதி செய்யப்படும் எரிபொருளிலேயே தங்கியிருக்கும் இலங்கையின் சுத்திகரிப்புத் திறன், எரிபொருள் சேமிப்பு மற்றும் விநியோக உள்கட்டமைப்பில் காணப்படும் நீண்டகாலப் பலவீனங்கள் மீண்டும் வெளிப்பட்டுள்ளன.

பெட்ரோலிய உற்பத்திச் சங்கிலி முழுவதிலும் திட்டமிடப்பட்ட முதலீடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் இந்தப் பலவீனங்களைச் சிறந்த வாய்ப்புகளாக மாற்றிக்கொள்ள முடியும் என ஜெயின் சுட்டிக்காட்டுகின்றார். சுத்திகரிப்புத் திறனை விரிவாக்குதல், குழாய்வழிக் கட்டமைப்புகளை நவீனமயமாக்குதல், துறைமுக வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் எரிபொருள் சேமிப்பு வளாகங்களை வளர்த்தெடுத்தல் என்பவற்றின் மூலம் நாட்டின் ஆற்றல் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடிவதுடன், சர்வதேச கடல்சார் கப்பல் பாதையில் இலங்கை ஒரு பிரதான பங்கரிங் (Bunkering) மற்றும் விநியோக மையமாகவும் உருவெடுக்கும்.

பல வருட கால உரையாடலும் நடைமுறைச் செயற்பாடும்

உலகின் மிகக் பரபரப்பான கப்பல் பாதைக்கு அருகில் அமைந்திருப்பது இலங்கை பெற்றுள்ள, வேறு எந்தவொரு நாட்டினாலும் இலகுவில் பெற முடியாத மிகப்பெரிய போட்டிச் சாதகமாகும் எனச் சுட்டிக்காட்டிய லங்கா ஐ.ஓ.சி. தலைவர், பொருத்தமான உள்கட்டமைப்புகளைக் கட்டியெழுப்புவதன் மூலம் வெறும் எரிபொருளை இறக்குமதி செய்யும் ஒரு நாட்டிலிருந்து சர்வதேசக் கடல்சார் போக்குவரத்திற்குச் சேவைகளை வழங்கும் பிராந்தியச் சேமிப்பு, சுத்திகரிப்பு மற்றும் விநியோக மையமாக மாற முடியும் எனக் கூறினார்.

2015 - 2018 காலப்பகுதியிலும் இலங்கையில் பணியாற்றிய அனுபவமிக்க அனுஜ் ஜெயின் இங்கு குறிப்பிடுகையில், இந்த மூலோபாய யோசனைகளில் பெரும்பாலானவை சுமார் பத்து வருடங்களாகக் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் இத்துறையின் பங்குதாரர்களுக்கு மத்தியில் பரவலாக விவாதிக்கப்பட்டு வந்துள்ளன என்றார்.

"எமது வழிகாட்டல் வரைபடம் மிகவும் தெளிவாக உள்ளது. தற்போது நாட்டிற்கு முன்னால் உள்ள மிகப்பெரிய சவால் திட்டமிடுவது அல்ல, அவற்றை களத்தில் நடைமுறைப்படுத்துவதேயாகும் (Execution)" என அவர் மேலும் வலியுறுத்தினார்.

ஹோமுஸ் நீரிணையும் மூலோபாய எண்ணெய் இருப்புகளும்

அண்மையில் ஹோமுஸ் நீரிணையை (Strait of Hormuz) சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட தற்காலிக பதற்ற நிலைகள் மூலம், போதுமான மூலோபாய எரிபொருள் இருப்புகள் இல்லாத, இறக்குமதியை அடிப்படையாகக் கொண்ட நாடுகள் எவ்வாறான ஆபத்துகளை எதிர்கொள்கின்றன என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. அவசர விநியோகத் தடங்கல்கள் மற்றும் விலை மாற்றங்களில் இருந்து பாதுகாப்பைப் பெற இலங்கைக்கு ஸ்திரமான சேமிப்பு அமைப்பொன்று அத்தியாவசியமாகும்.

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் பாரம்பரிய சில்லறை எரிபொருள் விற்பனைக்கு அப்பால் சென்று, உராய்வு எண்ணெய்கள் (Lubricants), பிட்டுமின் (Bitumen), கப்பல் எரிபொருள் (Bunkering), பெட்ரோ கெமிக்கல்ஸ் மற்றும் திருகோணமலையிலுள்ள கீழ் எண்ணெய்த் தாங்கி வளாகத்தை (Lower Tank Farm) அபிவிருத்தி செய்து நாட்டின் ஆற்றல் துறையில் நீண்டகால முதலீட்டாளராகச் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இலங்கையை ஓர் ஆற்றல் மையமாக மாற்றுவது என்பது தனிவொரு நிறுவனத்தின் திறனுக்கு அப்பாற்பட்ட, பாரிய அரச மற்றும் தனியார் துறையின் கூட்டு முதலீட்டில் தங்கியுள்ளதொன்றாகும் என்றும், அதற்குத் தெளிவான ஒழுங்குமுறைச் சட்டக்கட்டமைப்பு, விரைவான அங்கீகாரச் செயல்முறை மற்றும் நீண்டகால தேசிய ஆற்றல் திட்டமிடல் என்பன அவசியமாகும் என்றும் ஜெயின் சுட்டிக்காட்டுகின்றார். நாட்டின் அரசாங்கம் பாரிய அளவிலான சுத்திகரிப்பு அல்லது சேமிப்புத் திட்டங்களை நோக்கி நகருமானால், அதற்குத் தொழில்நுட்ப, வணிக மற்றும் நிதிசார் உதவிகளை வழங்க இந்தியன் ஒயில் நிறுவனம் (IOC) தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...