Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை!

T

The Leader Desk

ஜூலை 28, 2026 • 5:57 AM

சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குறித்த வழக்கு இன்று (28) பதுளை மேல்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • சமிந்த விஜேசிறி மற்றும் அவரது சாரதியான பண்டார ரத்நாயக்க ஆகிய இரு பிரதிவாதிகளும் 4 குற்றச்சாட்டுகளுக்கும், அமைச்சர்களின் பாதுகாப்புச் சேவையைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரியான ரசிக கருணாத்திலக்க 3 குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளிகளாகத் தீர்மானிக்கப்பட்டனர்.
  • எவ்வாறாயினும், பிரதிவாதியான சாரதி பண்டார ரத்நாயக்க உயிரிழந்துள்ளதாக இங்கு குறிப்பிடப்பட்டது.
எழுத்து அளவு:

குறித்த வழக்கு இன்று (28) பதுளை மேல்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக வழிமறித்துத் தாக்குதல் நடாத்தியமை, காயங்களை ஏற்படுத்தியமை, இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் காயங்களை ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, அவரது சாரதி மற்றும் அமைச்சர்களின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராகப் பதுளை மேல்நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பதுளை மேல்நீதிமன்றம், தண்டனை விவரங்களை இன்று (28) அறிவிக்கவுள்ளது.

சமிந்த விஜேசிறி மற்றும் அவரது சாரதியான பண்டார ரத்நாயக்க ஆகிய இரு பிரதிவாதிகளும் 4 குற்றச்சாட்டுகளுக்கும், அமைச்சர்களின் பாதுகாப்புச் சேவையைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரியான ரசிக கருணாத்திலக்க 3 குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளிகளாகத் தீர்மானிக்கப்பட்டனர்.

எவ்வாறாயினும், பிரதிவாதியான சாரதி பண்டார ரத்நாயக்க உயிரிழந்துள்ளதாக இங்கு குறிப்பிடப்பட்டது.

2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளன்றோ பண்டாரவளை நகரச் சுற்றவளைவுக்கு அருகே பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி உள்ளிட்ட குழுவினர் ஜீப் வண்டிகளில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், அவரது ஜீப் வண்டியை பொலிஸ் ஜீப் வண்டியொன்று முந்திச் சென்றமை தொடர்பாக ஏற்பட்டதாகக் கூறப்படும் தர்க்கமே இச்சம்பவத்திற்கு மூலகாரணம் என வழக்கு விசாரணையின் போது வெளிச்சத்திற்கு வந்தது.

தம்மை முந்திச் சென்ற பொலிஸ் ஜீப் வண்டியை வழிமறித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர், அதில் இருந்த அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துத் தாக்குதல் நடத்தி காயங்களை ஏற்படுத்தியதாக முறைப்பாட்டாளர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...