உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கில் 400க்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளதுடன், காணாமல்போனோரில் பெரும்பாலானோர் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் எனப் பதிவாகியுள்ளது.
இவ்வாறு காணாமல்போனோரில் அதிகமானோர் இந்தியப் பிரஜைகள் என்பதுடன் மலேசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நேபாளத்திற்கும் திபெத்திற்கும் இடைப்பட்ட எல்லைப் பகுதிக்கு அருகில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பனிப்பாறைகள் சரிந்து உருகியதால் 'போடே கோஷி' (Bote Koshi) ஆறு திடீரென அரைகுறை நிலையின்றி வான்பாய்ந்ததாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆறு பெருக்கெடுத்ததைத் தொடர்ந்து, சீறிப்பாய்ந்த வெள்ள நீர் காட்மாண்டு தலைநகருக்கு வடக்கே அமைந்துள்ள 'ரசுவா' (Rasuwa) பகுதியை வந்தடைந்ததுடன், அங்குள்ள பல கிராமங்கள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கின.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலர் காணாமல்போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகளுக்காக விசேட நிவாரணக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நேபாள அரசு அறிவித்துள்ளது.
ஏற்பட்டுள்ள பேரழிவையடுத்து, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் நேபாளத்திற்கு உடனடி நிவாரணக் குழுக்களை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸும் இந்தத் துயரம் குறித்து விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதுடன், நேபாளத்திற்குத் தேவையான உதவிகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.


