அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று (27) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை அரசியலமைப்பின் மூலம் மேன்முறையீட்டு நீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லை முறையே 63 மற்றும் 65 ஆக காணப்படுகின்ற நிலையில், அதனை அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக மேலும் இரண்டு வருடங்களால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் யோசனை முன்வைத்துள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பில் அறிக்கைகளை வெளியிட்டுள்ள சுயாதீன சட்டத்தரணிகள் சங்கம், அரசாங்கத்தின் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது.
உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் தற்போது 08 நீதிபதி பதவிகள் வெற்றிடமாக காணப்படுவதாகவும், இந்த வெற்றிடங்களை நிரப்புவதை ஜனாதிபதி நீண்டகாலமாகத் தவிர்த்து வருவதாகவும் குறித்த அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


