வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, வத்துபிட்டிவல முதலீட்டு வலய பொலிஸ் சாவடியைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உடனடியாகச் அமலுக்கு வரும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை 23ஆம் திகதி காலை 10.45 மணியளவில் வத்துபிட்டிவல வைத்தியசாலைக்கு அருகிலுள்ள தனியார் நிறுவனமொன்றிற்கு வெளியே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சீருடையில் இருந்த குறித்த உத்தியோகத்தர், கடமையில் உள்ள ஒரு அதிகாரிக்குப் பொருத்தமற்ற முறையில் நடந்துகொண்டதுடன், பொதுமக்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டபோது அச்சுறுத்தும் தொனியில் பேசியதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அவரது இச்செயற்பாடானது இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கும் ஒட்டுமொத்த அரச சேவைக்கும் களங்கத்தை ஏற்படுத்துவதுடன், ஏனைய அதிகாரிகளுக்குப் தவறான முன்னுதாரணமாக அமைக்கூடும் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, ஸ்தாபனக் கோவையின் விதிகளுக்கமைய குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் பொறுப்பிலுள்ள அதிகாரிகளின் பொருத்தமற்ற அல்லது ஒழுங்கீனமான நடத்தைகள் ஒருபோதும் சகித்துக்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


