Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

எதிர்வரும் 26 ஆம் திகதி காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில்!

T

The Leader Desk

மார்ச் 23, 2020 • 10:31 AM

எதிர்வரும் 26 ஆம் திகதி காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எதிர்வரும் 26 ஆம் திகதி காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
  • பின்னர், 26 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி முதல் ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
  • இதேவேளை, கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.
  • பின்னர், நண்பகல்12.00 மணிக்கு குறித்த பிரதேசங்களுக்கு மீண்டும் அமுல்ப்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (27) காலை 6 மணி வரையில் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

எதிர்வரும் 26 ஆம் திகதி காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக  பிரிவு தெரிவித்துள்ளது.

பின்னர், 26 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி முதல் ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக  பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

பின்னர், நண்பகல்12.00 மணிக்கு குறித்த பிரதேசங்களுக்கு மீண்டும் அமுல்ப்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (27) காலை 6 மணி வரையில் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

27 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு மீண்டும் குறித்த மாவட்டங்களுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நகர்த்தப்படுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், ஊரடங்கு உத்தரவின் போது அனைத்து மாவட்டத்திலும் விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகளின் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளை முறையாக கையாள வேண்டும் என விவசாய மற்றும் வர்த்தக அமைச்சருக்கு அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...