Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்ட கத்தோலிக்க திருத்தந்தை; பொறுப்பான பாதுகாப்பு அதிகாரிகளை வெளிப்படுத்த அழுத்தம்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 25, 2026 • 5:16 AM

காணாமல் ஆக்கப்பட்ட கத்தோலிக்க திருத்தந்தை; பொறுப்பான பாதுகாப்பு அதிகாரிகளை வெளிப்படுத்த அழுத்தம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆக்கப்பட்டு இருபது ஆண்டுகள் நிறைவடையும் வேளையில் சுயாதீன விசாரணையைக் கோரி யாழ்ப்பாண மறைமாவட்டம் ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர் அனுப்பியுள்ளது.
  • இருபது ஆண்டுகளுக்கு முன்னர் கடைசியாக கடற்படை சோதனைச்சாவடிக்கு அருகில் காணப்பட்ட அவர்கள் இருவரையும் நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாண கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நீதிக்கும் அமைதிக்குமான ஆணைக்குழு அண்மையில் யாழ்ப்பாணம் அல்லெப்பிட்டி சந்தியில் நினைவேந்தல் ஒன்றை நடத்தியிருந்தது.
  • அல்லெப்பிட்டி சோதனைச்சாவடி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி உண்மைய வெளிப்படுத்துமாறும், சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறும் சர்வதேசத்திடம் கோரிக்கை.
எழுத்து அளவு:

ஆக்கப்பட்டு இருபது ஆண்டுகள் நிறைவடையும் வேளையில் சுயாதீன விசாரணையைக் கோரி யாழ்ப்பாண மறைமாவட்டம் ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர் அனுப்பியுள்ளது.

அல்லெப்பிட்டி சோதனைச்சாவடி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி உண்மைய வெளிப்படுத்துமாறும், சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறும் சர்வதேசத்திடம் கோரிக்கை.

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கத்தோலிக்க அடிகளார் ஒருவரினதும் அவரது உதவியாளரினதும் காணாமல் ஆக்கப்படலை மறந்துவிடுவதற்கோ அல்லது உண்மை தேடலைக் கைவிடுவதற்கோ ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச சமூகமும் அனுமதிக்கக் கூடாது என இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், நீதியை நிலைநாட்டுதல் மற்றும் நிலையான அமைதிக்காகச் தீவிரமாகச் செயல்படும் முதன்மை மத நிறுவனங்களில் ஒன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயரிஸ்தானிகர் அலுவலகத்திடம் வலியுறுத்தியுள்ளது.

catho 4

திருச்செல்வம் நிஹால் ஜிம் பிரவுன் கத்தோலிக்க அடிகளார் மற்றும் அவரது உதவியாளரான வின்ஸ்லாவாஸ் வின்சஸ் விமலதாஸ் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் நம்பகமான, சுயாதீனமான மற்றும் வெளிப்படையான விசாரணையை நடத்துமாறு இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பிய மகஜர் மூலம் யாழ்ப்பாண கத்தோலிக்க மறைமாவட்டம் வலியுறுத்தியுள்ளது.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் கடைசியாக கடற்படை சோதனைச்சாவடிக்கு அருகில் காணப்பட்ட அவர்கள் இருவரையும் நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாண கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நீதிக்கும் அமைதிக்குமான ஆணைக்குழு அண்மையில் யாழ்ப்பாணம் அல்லெப்பிட்டி சந்தியில் நினைவேந்தல் ஒன்றை நடத்தியிருந்தது.

அதிகாரிகளை வெளிப்படுத்தி சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான கோரிக்கை

catho 6

பலவந்தமாக அல்லது விருப்பமின்றி காணாமல் ஆக்கப்படல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பணிக்குழுவிற்கு அனுப்பப்பட்ட மகஜர் மூலம் அந்த ஆணைக்குழு மேலும் கோருவதாவது, அவர்களைக் காணாமல் ஆக்கியமையுடன் தொடர்புடைய அனைத்து இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், சோதனைச்சாவடியில் இருந்த அதிகாரிகள் மற்றும் ஏனைய உத்தியோகபூர்வ பதிவுகளைப் பகிரங்கப்படுத்தி அவற்றைப் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறது.

அக்காலப்பகுதியில் அல்லெப்பிட்டி பகுதியில் கடமையாற்றிய இராணுவத்தினர் மற்றும் அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களிடம் விசாரணை நடத்துமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தும் யாழ்ப்பாண கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நீதிக்கும் அமைதிக்குமான ஆணைக்குழு, தகவல்களை வழங்கும் சாட்சிகள், குடும்ப உறுப்பினர்கள், குருக்கள் மற்றும் ஏனைய நண்பர்களுக்கு அச்சுறுத்தல்கள் அல்லது பழிவாங்கல்கள் ஏற்படாத வகையில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தனது மகஜரில் குறிப்பிட்டுள்ளது.

திருச்செல்வம் நிஹால் ஜிம் பிரவுன் கத்தோலிக்க அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் வின்ஸ்லாவாஸ் வின்சஸ் விமலதாஸ் ஆகியோருக்கு நேர்ந்த கதி என்ன என்பதையும் அவர்கள் எங்கு உள்ளார்கள் என்ற உண்மையையும் வெளிப்படுத்த உதவுவது மட்டுமன்றி, பொறுப்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டால் சட்டத்தின்படி அவர்கள் பொறுப்புடையவர்கள் என அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அந்த மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நஷ்டஈடு, நீதி மற்றும் எதிர்கால உத்தரவாதம்

catho 7

தனது மகஜர் மூலம் யாழ்ப்பாண கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நீதிக்கும் அமைதிக்குமான ஆணைக்குழு, இருபது ஆண்டுகளாக நிச்சயமற்ற நிலையிலும் துயரத்திலும் வாழும் குடும்பத்தினருக்கும் சமூகத்திற்கும் பொருத்தமான நஷ்டஈடு மற்றும் உதவிகளை வழங்குவதற்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஐக்கிய நாடுகள் பணிக்குழுவிடம் கோரியுள்ளது.

"உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் மனித கண்ணியம் ஆகியவறைக் கருத்தில் கொண்டே நாங்கள் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். நாங்கள் பழிவாங்கலை எதிர்பார்க்கவில்லை. என்ன நடந்தது என்பதற்கான நேர்மையான உண்மையும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியும், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காது என்பதற்கான உத்தரவாதமுமே எங்களுக்கு வேண்டும்."

கத்தோலிக்க அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் காணாமல் ஆக்கப்பட்ட இரு தசாப்தங்கள் கடந்துள்ள பின்னணியில், அவர்களின் குடும்பத்தினரும், யாழ்ப்பாண கத்தோலிக்க திருச்சபையும், யாழ்ப்பாண மக்களும் உண்மையையும் நீதியையும் பெறுவதற்கும், இந்த வழக்குக்கு தெளிவானதொரு முடிவைப் பெறுவதற்கும் உரிமையும் தகுதியும் உடையவர்கள் என யாழ்ப்பாண கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நீதிக்கும் அமைதிக்குமான ஆணைக்குழு, பலவந்தமாக அல்லது விருப்பமின்றி காணாமல் ஆக்கப்படல் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக்குழுவிற்குத் தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...