Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

வட, கிழக்கில் 25% இராணுவக் குறைப்பு கோரிக்கைக்கு அமெரிக்க அமைப்புகள் அங்கீகாரம்

T

The Leader Desk

ஜனவரி 7, 2023 • 3:32 AM

வட, கிழக்கில் 25% இராணுவக் குறைப்பு கோரிக்கைக்கு அமெரிக்க அமைப்புகள் அங்கீகாரம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • , 1983க்கு முந்திய காலப்பகுதியில் தமிழ் பகுதிகளில் இருந்ததைப் போன்று இராணுவப் பிரசன்னத்தை குறைக்க வேண்டும் என்ற இலங்கையை தளமாகக் கொண்ட தமிழ் சிவில் சமூகக் குழுக்களின் கூட்டு அழைப்பை அமெரிக்காவை தளமாகக் கொண்ட பல புலம்பெயர் தமிழ் குழுக்கள் அங்கீகரித்துள்ளன.
  • அத்துடன் சம்பிரதாயமான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் தமிழர் பகுதிகளில் இருந்து 25 வீத இராணுவ பிரசன்னத்தை இலங்கை குறைக்க வேண்டும் என்று இலங்கையின் சிவில் குழுக்கள் கோரியுள்ளன.
  • தமிழ் மக்களுக்கு எதிராக பாரிய அட்டூழியங்களைச் செய்த அதே துருப்புக்களே பாதிக்கப்பட்டவர்களிடையே நிறுத்தப்பட்டுள்ளன.
  • ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக ஆய்வு அறிக்கையின்படி, மே 2009 இல் முடிவடைந்த போரின் இறுதி ஆறு மாதங்களில் சுமார் எழுபதாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
எழுத்து அளவு:

, 1983க்கு முந்திய காலப்பகுதியில் தமிழ் பகுதிகளில் இருந்ததைப் போன்று இராணுவப் பிரசன்னத்தை குறைக்க வேண்டும் என்ற இலங்கையை தளமாகக் கொண்ட தமிழ் சிவில் சமூகக் குழுக்களின் கூட்டு அழைப்பை அமெரிக்காவை தளமாகக் கொண்ட பல புலம்பெயர் தமிழ் குழுக்கள்  அங்கீகரித்துள்ளன.

அத்துடன் சம்பிரதாயமான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் தமிழர் பகுதிகளில் இருந்து 25 வீத இராணுவ பிரசன்னத்தை இலங்கை குறைக்க வேண்டும் என்று இலங்கையின் சிவில் குழுக்கள் கோரியுள்ளன.

இது பேச்சுவார்த்தைக்கு நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் அவை சுட்டிக்காட்டியுள்ளன.

பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர் யுத்தம் முடிவடைந்த பின்னரும் தமிழர் பிரதேசங்களில் பாரிய இராணுவ பிரசன்னம் தொடர்கிறது.

1983ஆம் ஆண்டு முதல் தமிழர் பகுதிகளில் அதிகப்படியான இராணுவக் கட்டியெழுப்பும் ஆரம்பிக்கப்பட்டது.

தமிழ் மக்களுக்கு எதிராக பாரிய அட்டூழியங்களைச் செய்த அதே துருப்புக்களே பாதிக்கப்பட்டவர்களிடையே நிறுத்தப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக ஆய்வு அறிக்கையின்படி, மே 2009 இல் முடிவடைந்த போரின் இறுதி ஆறு மாதங்களில் சுமார் எழுபதாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

ஏராளமான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பல தீர்மானங்கள் பொறுப்புக்கூறலுக்கு அழைப்பு விடுத்த போதிலும், ஒரு அரசியல் அல்லது இராணுவ உறுப்பினர் கூட நீதியின் முன் நிறுத்தப்படவில்லை என மதத் தலைவர்கள் பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்புகள் பாதிக்கப்பட்ட குழுவினர் மற்றும் பலர் அடங்கிய இலங்கைத் தமிழ் சிவில் சமூகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான எந்தவொரு நிரந்தர அரசியல் தீர்வும், சர்வதேச ரீதியில் நடத்தப்படும் மற்றும் கண்காணிக்கப்படும் வாக்கெடுப்பு மூலம், சர்வதேச ரீதியில் தமிழ் மக்களின் ஆணையைப் பெற வேண்டும் என்றும் இலங்கையின் தமிழ் சிவில் குழு வலியுறுத்தியுள்ளது.

இந்தநிலையில் இலங்கையின் தமிழ் சிவில் குழுவின் இந்த கோரிக்கைகைகளை வட அமெரிக்காவின் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு, இலங்கைத் தமிழ்ச் சங்கம், தமிழ் அமெரிக்கர்கள் ஐக்கிய அமைப்பு, ஐக்கிய அமெரிக்காவின் தமிழ் செயல் குழு, உலகத் தமிழ் அமைப்பு என்பன அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...