Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

16 அரசியல் கைதிகளின் வழக்குகளை விரைவுபடுத்த நீதி அமைச்சர் வலியுறுத்தல்

T

The Leader Desk

டிசம்பர் 24, 2022 • 1:04 PM

16 அரசியல் கைதிகளின் வழக்குகளை விரைவுபடுத்த நீதி அமைச்சர் வலியுறுத்தல்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அமைப்பின் ஒரு சில போராளிகள் சிறைச்சாலையில் உள்ளார்கள்.
  • அவ்வாறு பல ஆண்டுகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 16 தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்து நிறைவு செய்ய நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
  • இதேவேளை, கிறிஸ்மஸ் பண்டிகைக்காக ஜனாதிபதியினால் வழங்கப்படும் விசேட பொது மன்னிப்பின் கீழ் சிறைக்கைதிகள் பலரை விடுதலை செய்ய சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
  • அரசியலமைப்பின் 34ஆவது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, சிறையிலுள்ள கைதிகளுக்கு இந்த சிறப்பு பொதுமன்னிப்பு வழங்கப்படுகிறது.
எழுத்து அளவு:

அமைப்பின் ஒரு சில போராளிகள் சிறைச்சாலையில் உள்ளார்கள்.

அவ்வாறு பல ஆண்டுகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 16 தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்து நிறைவு செய்ய நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

தலதா மாளிகை, மத்திய வங்கி மீதான குண்டுத் தாக்குதல், கோட்டபய ராஜபக்ஷ மற்றும் சரத் பொன்சேகாவை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் சிறைச்சாலைகளில் உள்ளதாக கூறினார்.

இந்நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை சட்டம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கிறிஸ்மஸ் பண்டிகைக்காக ஜனாதிபதியினால் வழங்கப்படும் விசேட பொது மன்னிப்பின் கீழ் சிறைக்கைதிகள் பலரை விடுதலை செய்ய சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசியலமைப்பின் 34ஆவது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, சிறையிலுள்ள கைதிகளுக்கு இந்த சிறப்பு பொதுமன்னிப்பு வழங்கப்படுகிறது.

இதன்படி, நாளை 25ஆம் திகதிக்குள் சிறையிலிருக்கும் கைதிகளின் தண்டனைக்காலத்தை கருத்தில் கொண்டு பொதுமன்னிப்பு வழங்கவும் அபராதத் தொகையைச் செலுத்தாத சிறைத் தண்டனைக் கைதிகள் அனுபவிக்கும் தண்டனையின் மீதிப் பகுதியை இரத்து செய்யவும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொடர்பில் கவனத்தில் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து) இருப்புத் தொகையை இரத்து செய்வதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு சிறப்பு பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதிக்கு உரிமையுண்டு.

சிறைச்சாலைகள் திணைக்களம் தற்போது விடுதலைக்கு உரித்துடைய கைதிகளின் பெயர்களை தயாரித்து வருவதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...