Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன தீவிர மனஉளைச்சலில் இருந்துள்ளார்!

T

The Leader Desk

ஜூலை 24, 2026 • 6:52 AM

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன தீவிர மனஉளைச்சலில் இருந்துள்ளார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் குற்றச்சாட்டு; நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு நிராகரிப்பு!
  • காணாமல்போன அலமாரியின் ஆடைகள் மற்றும் 23 வாசனைத் திரவியப் பெட்டிகள் வத்தளை தேவாலயத்திலிருந்து மீட்பு: சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் நீதிமன்றில் கருத்தறிவிப்பு!
  • விக்கிரமரத்ன தீவிர அதிர்ச்சியடைந்துள்ளதாக அவரது சட்டத்தரணி நேற்று (23) கொழும்பு மேலதிக நீதவான் ஓஷத மிகார மஹாரச்சி முன்னிலையில் அறிக்கை செய்தார்.
  • பொருட்களைப் பட்டியலிடும்போதும் ஒத்துழைப்பு வழங்கினார்." "அதன் பின்னர் அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணியளவில் நான் முறைப்பாட்டாளரையும் அவரது தாயாரையும் அவ்வீட்டிலிருந்து அனுப்பி வைத்தேன்.
எழுத்து அளவு:

பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் குற்றச்சாட்டு; நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு நிராகரிப்பு!

  • காணாமல்போன அலமாரியின் ஆடைகள் மற்றும் 23 வாசனைத் திரவியப் பெட்டிகள் வத்தளை தேவாலயத்திலிருந்து மீட்பு: சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் நீதிமன்றில் கருத்தறிவிப்பு!

  • அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தனது திருமணமான மகனுக்கு வழங்கப்பட்டிருந்த பெறுமதிமிக்க பொருட்கள் நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக மகனின் சட்டப்பூர்வ மனைவியினால் எடுத்துச் செல்லப்பட்டமை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன தீவிர அதிர்ச்சியடைந்துள்ளதாக அவரது சட்டத்தரணி நேற்று (23) கொழும்பு மேலதிக நீதவான் ஓஷத மிகார மஹாரச்சி முன்னிலையில் அறிக்கை செய்தார்.

    முறைப்பாட்டாளரினால் முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மகனான என்.பி. விக்கிரமரத்ன என்பவரை பிரதிவாதியாகக் குறிப்பிட்டுத் தொடரப்பட்ட வழக்கு நேற்று நீதிமன்றில் அழைக்கப்பட்ட போதே விபரங்கள் வெளிவந்தன.

    பிரதிவாதி தரப்பின் சமர்ப்பணங்களும் குற்றச்சாட்டுகளும்:

    பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி சமின் பரணகம நீதிமன்றிற்குச் சுட்டிக்காட்டுகையில், குறித்த வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களும் பிரதிவாதியின் பெற்றோராலேயே வழங்கப்பட்டவை என்றார். முறைப்பாட்டாளரும் அவரது தாயாரும் பொலிஸ் அதிகாரிகளுடன் வருகை தந்து வீட்டிலிருந்த கால் துடைப்பான், தலையணை உறைகள், சமையலறை உபகரணங்கள் மற்றும் குடிநீர் Glass வரை எடுத்துச் சென்றுள்ளதாகவும், இச்சம்பவம் காரணமாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் தனக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி தீவிர அதிர்ச்சியில் இருப்பதாகத் தெரிவித்ததாகவும் சட்டத்தரணி குறிப்பிட்டார்.

    நீதிமன்ற உத்தரவை மீறி இவ்வாறு செயற்பட்டமை தொடர்பில் முறைப்பாட்டாளர், அவரது தாயார் மற்றும் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின்கீழ் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.

    சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் விளக்கமளிப்பு:

    இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் கருத்த தெரிவித்த சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் நிமாலி பொன்சேகா, நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் அன்றாடத் தேவைகளுக்கான ஆடைகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே குறித்த வீட்டிற்குச் சென்றதாகக் குறிப்பிட்டார்.

    இதன்போது அலமாரியிலிருந்த ஆடைகளும் ஆவணங்களும் காணாமல்போயிருந்ததாகவும், பின்னர் கிடைத்த தகவலுக்கமைய வத்தளை பகுதியிலுள்ள தேவாலயமொன்றிலிருந்து குறித்த பெண்ணின் ஆடைகள், வாசனைத் திரவியங்கள் மற்றும் ஆவணங்கள் அடங்கிய 23 பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை வழக்குப்பொருட்களாக பெயரிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

    வீட்டிலிருந்து பொருட்களை எடுத்துச் சென்றபோது பிரதிவாதி எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்பதுடன், அவர் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் பொறுப்பதிகாரி மேலும் நீதிமன்றிற்குத் தெரிவித்தார்.

    "பாதிக்கப்பட்ட பெண், அவரது தாயார் மற்றும் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரியான நான் உள்ளிட்ட அதிகாரிகள் அந்த வீட்டிற்குச் சென்றோம். அந்த சந்தர்ப்பத்தில் பிரதிவாதி எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. இந்த பெண் வீட்டிற்குள் சென்று அலமாரியைத் திறந்து தனது ஆடைகள், ஆவணங்கள் இருக்கின்றவா எனப் பரிசோதித்தார்.

    ஆனால் அங்கு அவருடைய எந்தவொரு ஆடையோ, ஆவணங்களோ இருக்கவில்லை. அது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் பிரதிவாதியிடம் வினவியபோது, 'எனக்குத் தெரியாது' எனப் பதிலளித்தார்" என பிரதான பொலிஸ் பரிசோதகர் நிமாலி பொன்சேகா தெரிவித்தார்.

    அதன் பின்னர் முறைப்பாட்டாளர் தனது தங்க நகைகள் குறித்து பிரதிவாதியிடம் வினவியதாகவும், அதற்கு அது பாதுகாப்பகத்தில் (Safe) இருப்பதாக அவர் கூறியபோதிலும், அப்பாதுகாப்பகத்தைத் திறப்பதற்கான சாவி இல்லை எனக் கூறியதாகவும் பிரதான பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.

    சம்பவம் குறித்து மேலும் நீதிமன்றில் தெரிவித்த பிரதான பொலிஸ் பரிசோதகர் பின்வருமாறு குறிப்பிட்டார்:

    "இந்த முறைப்பாட்டாளர் அந்தப் பாதுகாப்பகத்தை அசைத்துப் பார்த்தார். இதன்போது அதில் தங்க நகைகள் இல்லை என்பதை அறிய முடிந்தது. அது குறித்து அவர் பிரதிவாதியிடம் வினவியபோது, 'எனக்குத் தெரியாது, அந்தப் பாதுகாப்பகத்தையும் முறைப்பாட்டாளரை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்' எனக் கூறினார். ஆனால் அவர் அதை வேண்டாம் எனக் கூறிவிட்டார்."

    "இந்த முறைப்பாட்டாளர் தனக்கு வேறொரு அறையில் தாயாருடன் வசிக்க வேண்டியுள்ளதாகவும், அதற்கு அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை அந்த வீட்டிலிருந்து எடுத்துச் செல்வதாகவும் பிரதிவாதியிடம் கோரிக்கை விடுத்தார். அந்த சந்தர்ப்பத்தில் அவர் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. தலையணைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் சமையலறைப் பயன்பாட்டுப் பொருட்களை எனது மற்றும் எனது அதிகாரிகளின் முன்னிலையில் சேகரித்தார். அந்த சந்தர்ப்பத்தில் முறைப்பாட்டாளர் பிரதிவாதியிடம் 'உங்களது பொருட்கள் இங்கு இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள்' என அவ்வப்போது கேட்டார். பிரதிவாதி அந்த சந்தர்ப்பத்தில் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. பொருட்களைப் பட்டியலிடும்போதும் ஒத்துழைப்பு வழங்கினார்."

    "அதன் பின்னர் அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணியளவில் நான் முறைப்பாட்டாளரையும் அவரது தாயாரையும் அவ்வீட்டிலிருந்து அனுப்பி வைத்தேன். அவர்கள் புறப்பட்டுச் சென்ற பின்னர் பிரதிவாதியிடம் சம்பவம் தொடர்பான வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டேன். இதன்போது அவர், நீதிமன்ற உத்தரவை மதித்ததைத் தவிர பொருட்களை எடுத்துச் செல்வதில் தனக்கு விருப்பமில்லை எனக் கூறினார். அதற்கு நான், 'பொருட்களை எடுத்துச் செல்வதற்கு முன்னர் பல தடவைகள் உங்களுக்கு விருப்பமின்மை உள்ளதா எனக் கேட்டேன் அல்லவா?' எனக் வினவினேன்."

    "2026 ஜூலை 16 ஆம் திகதி மாலை 6 மணியளவில் முறைப்பாட்டாளரிடமிருந்து எனது உத்தியோகபூர்வ தொலைபேசிக்கு ஒரு செய்தி வந்தது. அவர் அழுதுகொண்டே பேசினார். தனது வங்கி அலுவல் கணக்கிலிருந்து பல சந்தர்ப்பங்களில் பணம் குறைவடைந்துள்ளதாகக் கூறினார். அதன் பின்னர் அந்த வங்கிக் அட்டையைப் பயன்படுத்தி யாரோ ஒருவர் வத்தளை பகுதியிலுள்ள கடையொன்றில் பொருட்கள் வாங்கியுள்ளதாக அறிய முடிந்தது."

    "வத்தளை பகுதியிலுள்ள தேவாலயத்தின் பொறுப்பாளரிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய, அத்தேவாலயத்திலிருந்து 23 பெட்டிகளைக் கொண்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த 23 பெட்டிகளிலும் இந்த முறைப்பாட்டாளர் பயன்படுத்திய ஆடைகள், வாசனைத் திரவியங்கள், ஆவணங்கள் அடங்கிய பொருட்கள் காணப்பட்டதாகவும், அந்தப் பெட்டிகள் தற்போது வழக்குப் பொருட்களாக பெயரிடப்பட்டுள்ளதாகவும்" பிரதான பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றிற்குத் தெரிவித்தார்.

    இச்சம்பவம் குறித்து நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி சமின் பரணகம, முறைப்பாட்டாளர், அவரது தாயார் மற்றும் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி ஆகியோர் நீதிமன்ற உத்தரவை மீறி இவ்வாறு பொருட்களை எடுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவித்தார்.

    சட்டத்தரணி சமின் பரணகமவின் விளக்கமளிப்பு:

    சம்பவம் குறித்து மேலும் தெரிவித்த சட்டத்தரணி சமின் பரணகம பின்வருமாறு கூறினார்:

    "இச்சம்பவம் 2026 ஜூலை 15 ஆம் திகதி நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவிற்கமையவே நடைபெறுகிறது. இவர்கள் இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்க ஒன்று நிலுவையிலுள்ளது. எனவே நீதிமன்றினால் வழங்கப்படும் உத்தரவை நீக்குவது தடை செய்யப்பட்டுள்ளது. வீட்டிலுள்ள அனைத்துப் பொருட்களையும் சேகரித்து இந்த முறைப்பாட்டாளர் எடுத்துச் சென்றுள்ளார். வீட்டில் குடிப்பதற்கு இருந்த குடிநீர் Glass கூட இல்லை. சமைப்பதற்கு இருந்த கரண்டி வரை எடுத்துச் சென்றுள்ளார்."

    "இவர் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் (Apartment) வசிக்கின்றார். இவர் திருமண வாழ்க்கையின் அடிப்படையிலேயே அந்த வீட்டில் வசிக்கின்றார். அந்த வீட்டிற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் பிரதிவாதியின் தாயாரும் தந்தையுமே வாங்கிக் கொடுத்துள்ளனர். மேலும் பிரதிவாதியின் தந்தைக்குக் கிடைத்த பரிசுகளே வழங்கப்பட்டிருந்தன. அப்பொருட்களை பொலிஸ் அதிகாரிகளுடன் வந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் எடுத்துச் சென்றமை தொடர்பில் பிரதிவாதியின் தந்தை தீவிர அதிர்ச்சியடைந்துள்ளதாக இச்சம்பவம் நடந்த நாளன்று தொலைபேசியில் அழைத்துத் தெரிவித்தார். இவ்வாறானதொரு சம்பவத்தை பொலிஸ் மா அதிபர் மட்டுமல்ல, யாராலும் தாங்கிக்கொள்ள முடியாது."

    "கால் துடைப்பான் முதல் எடுத்துச் சென்றுள்ளனர். தலையணை உறையைக் கூடக் கழற்றி எடுத்துச் சென்றுள்ளனர். எனவே 2024/8 ஆம் இலக்கச் சட்டத்தின் 3 (அ) பிரிவின்கீழ் முறைப்பாட்டாளர், முறைப்பாட்டாளரின் தாயார் மற்றும் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற உத்தரவை மீறி நீதிமன்றத்தை அவமதித்தமைக்காகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றைக் கேட்டுக்கொள்கிறேன்" எனச் சட்டத்தரணி தெரிவித்தார்.

    அந்த சந்தர்ப்பத்தில் நீதவான், சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகரிடம் இது குறித்துக் வினவினார்.

    அதன்போது அவர், தான் நீதிமன்றத்தை அவமதிக்கவில்லை என்றும் நீதிமன்ற உத்தரவிற்கமையவே செயற்பட்டதாகவும் தெரிவித்தார்.

    பிரதான பொலிஸ் பரிசோதகர் மேலும் கூறுகையில்:

    "இந்த முறைப்பாட்டாளரை வீட்டிற்குள் செல்ல பிரதிவாதி அனுமதிக்கவில்லை. கதவைப் பூட்டியுள்ளார். அது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த வீட்டின் சாவியையும் மாற்றியுள்ளனர். அதற்கமைய முறைப்பாட்டாளரின் மனித உரிமைகளும் மீறப்பட்டுள்ளன. வீட்டிலிருந்து ஆவணங்களைப் பெற்றுக்கொள்வதற்காக ஐந்து தடவைகளுக்கு மேல் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அதற்கமைய இந்தப் பெண் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் செய்த முறைப்பாட்டின் பேரிலேயே, 4 மாதங்களாகத் தனது ஆடை கூட இல்லாமல் இருந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக நீதிமன்ற உத்தரவிற்கமையச் செயற்பட்டோம். மேலும் அந்த வீட்டிற்குச் சென்ற சந்தர்ப்பத்தில் பிரதிவாதி எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை" என்றார்.

    நீதிமன்றத் தீர்ப்பு:

    முன்வைக்கப்பட்ட விடயங்களை கவனத்திற் கொண்ட மேலதிக நீதவான், நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்பட்டதாகக் கூறி பிரதிவாதி தரப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்தார். சம்பவம் தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்ட நீதவான், மேலதிக விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

    இச்சம்பவம் தொடர்பில் விவாகரத்து வழக்க ஒன்றும் நிலுவையிலுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண் பல மாதங்களாகத் தனது அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருந்தமையினால் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமைவாகவே இந்தப் பொலிஸ் தலையீடு இடம்பெற்றுள்ளது.

    தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

    எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

    சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

    Tamil Leader • எங்களைப் பற்றி

    Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

    மேலும் வாசிக்க (Read More)→

    கலந்துரையாடல் (0)

    உரையாடலில் இணையுங்கள்

    கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

    கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...