பெண்மணியான உமா குமரன், புதிய பிரதமர் அண்டி பேர்னம் (Andy Burnham) அவர்களினால் இராஜாங்க அமைச்சராக (Deputy Minister / Parliamentary Under-Secretary) நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த உமா குமரன், உள்நாட்டு யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து வெளியேறிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பெற்றார்களின் புதல்வியாவார்.
இன்று முதல் அவர் புதிய வெளியுறவு அமைச்சர் எட் மிலிபான்ட் (Ed Miliband) அவர்களின் கீழ், வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இராஜாங்க அமைச்சராக (Parliamentary Under-Secretary of State in the Foreign, Commonwealth and Development Office) கடமையாற்றுவார்.
பிரித்தானியத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாவது பெண் அமைச்சர் என்பதில் பெருமகிழ்ச்சியடைவதாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுத் தெரிவித்துள்ளார்.
"எனது பெற்றோருக்கு புகலிடமளித்த பிரித்தானியா, அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பி முன்னேறுவதற்கு நிழலாக இருந்தது" என்றும் அமைச்சர் உமா குமரன் குறிப்பிட்டுள்ளார்.
'Parliamentary Under-Secretary of State' என்பது பிரித்தானிய அரசாங்கத்தின் இளநிலை மட்டத்தைக் குறிக்கும் ஒரு இராஜாங்க அமைச்சர் பதவியாகும். பிரித்தானிய பாராளுமன்றத்தில் 'Minister' என்பது இராஜாங்க அமைச்சர் பதவியைக் குறிப்பதுடன், அது 'Parliamentary Under-Secretary of State' பதவியை விடப் பதவியில் உயர்வானதாகும். பிரித்தானிய அரசாங்கத்தில் 'Secretary of State' என்பது அமைச்சரவை அந்தஸ்துள்ள (Cabinet Minister) அமைச்சர் பதவியாகும்.
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ரணில் ஜயவர்தன, கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதமரான லிஸ் ட்ரஸ் அவர்களின் கீழ் பிரித்தானியாவின் சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமப்புற விவகாரங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகக் கடமையாற்றினார். பின்னர் அவருக்கு 'நைட்' (Knight) பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சேர் ரணில் ஜயவர்தனவின் தந்தை, பத்தேகம அபேவிக்ரம/லேனரோல் குடும்பத்தின் உறுப்பினராவார்.


