Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

“சம்பந்தன், சுமந்திரனுடனான பேச்சு உத்தியோகபூர்வமற்றது’

T

The Leader Desk

டிசம்பர் 23, 2022 • 5:03 AM

“சம்பந்தன், சுமந்திரனுடனான பேச்சு உத்தியோகபூர்வமற்றது’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சந்திப்பு உத்தியோக பூர்வமற்றது என ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் ஊடாக ஜனாதிபதியிடம் கோரி இருந்தார்.
  • குறித்த சந்திப்பினை ஒத்திவைக்குமாறு யாழ்.
எழுத்து அளவு:

சந்திப்பு உத்தியோக பூர்வமற்றது என ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் (21) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி,  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் ஆகியோர் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

குறித்த சந்திப்பினை ஒத்திவைக்குமாறு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் ஊடாக ஜனாதிபதியிடம் கோரி இருந்தார்.

குறித்த கடிதத்துக்கு பதிலளிக்கும் முகமாக சி.வி விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட கடிதத்தில், இந்த சந்திப்பு உத்தியோகபூர்வமற்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் அடுத்த சந்திப்புகள் ஒழுங்கு செய்யப்படும் எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...