Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

சீனாவில் பரவும் புதிய ஒமிக்ரோன்; இலங்கைத் தூதரக ஊழியர்களுக்கும் தொற்று

T

The Leader Desk

டிசம்பர் 23, 2022 • 4:55 AM

சீனாவில் பரவும் புதிய ஒமிக்ரோன்; இலங்கைத் தூதரக ஊழியர்களுக்கும் தொற்று   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதனுடன் எதிர்காலத்தில் மீண்டும் முகக் கவசம் பாவனையை கட்டாயமாக்கும் யோசனை ஒன்றும் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
  • தற்போது வரை சுமார் 1.48 இலட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
  • அங்கு ஒமிக்ரோன் மாறுபாடு கொண்ட பிஎப் 7 வகை வைரஸ் தான் தற்போது கொடூர தாக்குதல் நடத்தி வருகிறது.
எழுத்து அளவு:

இதனுடன் எதிர்காலத்தில் மீண்டும் முகக் கவசம் பாவனையை கட்டாயமாக்கும் யோசனை ஒன்றும் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நாட்டுக்கு வரும் வெளிநாட்டினரை மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கருத்தும் உள்ளது.

இதேவேளை, இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென சுகாதார தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த கொரோனா காலத்தில் இலங்கையில் பதிவாகிய முதலாவது கொரோனா தொற்றுக்குள்ளான நபர் சுற்றுலா வழிகாட்டியாக இருந்தவர் எனவும் அந்த அனுபவங்களை இம்முறை நிலைமையை தணிக்க பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். தற்போது வரை சுமார் 1.48 இலட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அங்கு ஒமிக்ரோன் மாறுபாடு கொண்ட பிஎப் 7 வகை வைரஸ் தான் தற்போது கொடூர தாக்குதல் நடத்தி வருகிறது.

இவ்வாறு சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்த அதேவேளை உயிரிழப்புகளும் பெருகி வருகிறது. இதனால் அங்குள்ள மயானங்களிலும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் அனைத்து ஊழியர்களும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தூதுவர் கலாநிதி பாலித கோஹன தெரிவித்துள்ளார்.

china1.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...