Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

இலங்கைப் பொலிஸாருக்கு இந்தியாவின் உதவி

T

The Leader Desk

டிசம்பர் 23, 2022 • 4:33 AM

இலங்கைப் பொலிஸாருக்கு இந்தியாவின் உதவி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜீப் வண்டிகள், நேற்றைய தினம் (22) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் வைத்து பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டன.
  • இதன்போது உரையாற்றிய அமைச்சர், இலங்கை பொலிஸாருக்கு இன்றைய தினம் விசேட தினம் எனவும் சில பொலிஸ் நிலையங்களில் கடமைக்காக வாகனங்களின்மைக்கு தீர்வாக இந்த 500 புதிய ஜீப் வண்டிகளை பெற்றுக்கொள்ள முடிந்தமை மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.
  • “மேலும் கடந்த 3 ஆண்டுகளாக பொலிஸ் துறையினால் வாகனங்களை வாங்க முடியவில்லை.
எழுத்து அளவு:

ஜீப் வண்டிகள், நேற்றைய தினம் (22) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் வைத்து பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டன.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அவர்களிடம் மேற்படி ஜீப் வண்டிகளைக் கையளித்தார்.

இதன்போது உரையாற்றிய அமைச்சர், இலங்கை பொலிஸாருக்கு இன்றைய தினம் விசேட தினம் எனவும் சில பொலிஸ் நிலையங்களில் கடமைக்காக வாகனங்களின்மைக்கு தீர்வாக இந்த 500 புதிய ஜீப் வண்டிகளை பெற்றுக்கொள்ள முடிந்தமை மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.

“பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்க, திருட்டு மற்றும் போதைப்பொருள்களை எதிர்த்துப் போராடுவதற்கு இந்த புதிய ஜீப் வண்டிகள் இலங்கை காவல்துறைக்கு மிகவும் அவசியமானவை.

“மேலும் கடந்த 3 ஆண்டுகளாக பொலிஸ் துறையினால் வாகனங்களை வாங்க முடியவில்லை. மேலும் இந்திய உயரதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்றுவதால் இத்திட்டம் விரைவாக வெற்றியடைய முடிந்தது. இந்திய உயர்ஸ்தானிகருக்கு எனது விசேட நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று, அமைச்சர் தெரிவித்தார்.

இதனையடுத்து உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர், “சட்டம் ஒழுங்கு, ஜனநாயகம் மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதற்காக இலங்கைப் பொலிஸாருக்கு இந்த புதிய ஜீப் வண்டிகளை வழங்கியுள்ளமை குறித்து இந்திய அரசாங்கம் மிகவும் மகிழ்ச்சியடைகிறது” என்றார்.

TA_26.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...