Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

23க்கு பின்னரே தேர்தல் பற்றிய முடிவு

T

The Leader Desk

பிப்ரவரி 19, 2023 • 4:26 AM

23க்கு பின்னரே தேர்தல் பற்றிய முடிவு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • என்று, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
  • முன்னதாக, உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  • எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அவருக்கும் சாதாரண அலுவலக நேரம் அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை தேர்தல் கடமைகளுக்கான மேலதிக வேலைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:

என்று, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்குறுதி அளித்தபடி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த இயலாது என உயர் நீதிமன்றத்தில் அறிவிக்கவுள்ளதாகவும் அவ்வாணைக்குழு தெரிவித்துள்ளது.

போதிய நிதி கிடைக்காத காரணத்தினால், தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதில் உள்ள சிக்கல்களை குறிப்பிடவுள்ளதாக அதன் தலைவர் கூறியுள்ளார்.  

தேர்தலை நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு முன்னதாக அறிவித்திருந்தது.

தபால் வாக்குச்சீட்டுகள் அரச அச்சகத்தில் இருந்து சரியான நேரத்தில் கிடைக்காததால், தபால் மூல வாக்குப்பதிவு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தபால் மூல வாக்களிப்பை காலவரையின்றி ஒத்திவைத்துள்ள தேர்தல் ஆணையாளர் நாயகம், அந்த அறிவிப்பை அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் விடுத்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அவருக்கும் சாதாரண அலுவலக நேரம் அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை தேர்தல் கடமைகளுக்கான மேலதிக வேலைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பிரதான அலுவலகம் உட்பட அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களும் வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் மூடப்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த விடுமுறை நாட்களில் ஏதேனும் விசேட கடமைக்காக அலுவலகத்தை திறப்பது அவசியமானால், தேர்தல் ஆணையாளரின் முன் அனுமதி பெறப்பட வேண்டும்.

தற்போது பணியில் உள்ள தற்காலிக உதவியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அலுவலர்களின் சேவைகள் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

ஊழியர்களின் போக்குவரத்துக்காக பல்வேறு நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட அனைத்து வாகனங்களும் உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விடுவிக்கப்படும்.

எவ்வாறாயினும், குறித்த அலுவலகத்தின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் பாதுகாப்பு தொடர்பில் எதிர்காலத்தில் அறிவுறுத்தல் வழங்கப்படுமெனவும் அதுவரை பொலிஸ் பாதுகாப்பினை பெற்றுக்கொள்ள ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...