Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

மோகினி எல்ல துயரம்; பலத்த காயமடைந்த மூன்று சிறுவர்கள் வேறொரு வைத்தியசாலைக்கு மாற்றம்!

T

The Leader Desk

ஜூலை 22, 2026 • 6:02 AM

மோகினி எல்ல துயரம்; பலத்த காயமடைந்த மூன்று சிறுவர்கள் வேறொரு வைத்தியசாலைக்கு மாற்றம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மோகினி எல்ல பகுதிக்கு அருகில் பள்ளத்தில் விபத்துக்குள்ளானதில், பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சையிலிருந்த மூன்று பாடசாலை மாணவர்கள் டிக்ஓயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
  • அவர்கள் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், நிலைமை தீவிரமாக இருந்ததால் திக்ஓயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
  • நல்லதண்ணி - மஸ்கெலியா பிரதான வீதியின் மோகினி எல்ல பகுதிக்கு அருகில், நல்லதண்ணியிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியொன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூன்று பாடசாலை மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.
எழுத்து அளவு:

மோகினி எல்ல பகுதிக்கு அருகில் பள்ளத்தில் விபத்துக்குள்ளானதில், பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சையிலிருந்த மூன்று பாடசாலை மாணவர்கள் டிக்ஓயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நல்லதண்ணி - மஸ்கெலியா பிரதான வீதியின் மோகினி எல்ல பகுதிக்கு அருகில், நல்லதண்ணியிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியொன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூன்று பாடசாலை மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.

அவர்கள் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், நிலைமை தீவிரமாக இருந்ததால் திக்ஓயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இன்று (22) காலை 8:15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், அதிக வேகத்துடன் பயணித்த முச்சக்கர வண்டியின் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தமையினாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நல்லதண்ணி பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் த்ரீவீலரின் சாரதி மற்றும் அதில் பயணித்த முதியவர் ஒருவர் என்றும், விபத்து இடம்பெற்ற வேளையில் த்ரீவீலரில் ஐந்து பேர் பயணித்துள்ளனர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...