Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

கொக்குத்தொடுவாயில் நில அபகரிப்பு முயற்சி முறியடிப்பு

T

The Leader Desk

டிசம்பர் 21, 2022 • 5:37 PM

கொக்குத்தொடுவாயில் நில அபகரிப்பு முயற்சி முறியடிப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரிவில் தமிழ் மக்களுக்கு சொந்தமான பூர்விக காணியினை வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஆதரவுடன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வெலிஓயா பகுதியில் உள்ள நில அளவைத் திணைக்களத்தினர் நேரடியாக குறித்த பகுதிக்கு வந்து 4 கிலோமீற்றருக்கு மேற்பட்ட இடங்களுக்கு எல்லைக்கற்களை நாட்டியுள்ளார்கள்.
  • கடந்த 18.12.2022 அன்று கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் கோட்டைக்கேணிபிள்ளையார் கோவில், முதல் அம்பட்டன்வாய்க்கால், வெள்ளைக்கல்லடி, குஞ்சுக்கால்வெளி, சிவந்தா முறிப்பு போன்ற பகுதிகளிலேயே குறித்த எல்லைக் கற்கள் நாட்டப்பட்டிருந்தன.
  • இந்தச் சம்பவம் குறித்து முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனுக்கு மக்கள் முறையிட்டதை தொடர்ந்து அரச திணைக்கள அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்கள்.
எழுத்து அளவு:

பிரிவில் தமிழ் மக்களுக்கு சொந்தமான பூர்விக காணியினை வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஆதரவுடன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வெலிஓயா பகுதியில் உள்ள நில அளவைத் திணைக்களத்தினர் நேரடியாக குறித்த பகுதிக்கு வந்து 4 கிலோமீற்றருக்கு மேற்பட்ட இடங்களுக்கு எல்லைக்கற்களை நாட்டியுள்ளார்கள்.

இதனை மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி தடுத்து நிறுத்தியுள்ளதுடன் நாட்டப்பட்ட எல்லைக்கற்களை அகற்ற வைத்துள்ளார்கள்.

கடந்த 18.12.2022 அன்று கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் கோட்டைக்கேணிபிள்ளையார் கோவில், முதல் அம்பட்டன்வாய்க்கால், வெள்ளைக்கல்லடி, குஞ்சுக்கால்வெளி, சிவந்தா முறிப்பு போன்ற பகுதிகளிலேயே குறித்த எல்லைக் கற்கள் நாட்டப்பட்டிருந்தன.

இந்தச் சம்பவம் குறித்து முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனுக்கு மக்கள் முறையிட்டதை தொடர்ந்து அரச திணைக்கள அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்கள்.

இந்நிலையில் 19.12.2022 அன்று சம்பவ இடத்துக்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் குறித்த பகுதி பிரதேச சபை உறுப்பினர் சிவலிங்கம் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மக்கள் அனைவரும் குறித்த பகுதிக்குச் சென்று அங்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் காணிப்பகுதி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர் ஆகியோரை சம்பவ இடத்திற்கு அழைத்திருந்த நிலையில் அவர்கள் அங்கு பிரசன்னமாகினர்.

இந்த நிலையில் குறித்த பகுதிக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளும் நில அளவைத் திணைக்களத்தினரும் அழைக்கப்பட்டுனர்.

அனைவருக்கும் இந்த எல்லைக்கற்கள் போடப்பட்ட இடங்கள் மக்களின் உறுதிக்காணி என்பதை மக்கள் மற்றும் கமக்கார அமைப்புக்கள் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், மக்களின் எதிர்ப்புக்கு அமைய அவர்கள் போட்ட கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனஜீவராசிகள் திணைக்களமோ அல்லது நில அளவைத் திணைக்களமோ மாவட்ட செயலாளருடனும் பிரதேச செயலாளருடனும் கூடி கலந்துரையாடுவதுடன் இந்தப் பிரதேசத்தின் அமைப்புக்களையும் அழைத்து கலந்துரையாடல் செய்யாமல் அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப எந்த நடவடிக்கையினையும் மேற்கொள்ளவேண்டாம் என்பதை இதன்போது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கொக்குத்தொடுவாயில் நில அபகரிப்பு முயற்சி முறியடிப்பு | Tamil Leader | We Lead the Nation