Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

“என் சாபத்திலிருந்து ராஜபக்‌ஷர்க்கள் தப்ப முடியாது”

T

The Leader Desk

டிசம்பர் 21, 2022 • 1:36 PM

“என் சாபத்திலிருந்து ராஜபக்‌ஷர்க்கள் தப்ப முடியாது”

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.
  • இல் உலகின் தலைசிறந்த 100 பெண்களில் ஒருவராக பி.பி.சியால் தெரிவு செய்யப்பட்டமை குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
  • அவர் மேலும் தெரிவிக்கையில், “2022 ஜனவரி 25இல் எனது கணவர் காணாமல்போய் 12 வருடங்களாகிவிட்டன.
  • “2010 ஜனவரி 25ஆம் திகதி எனது கணவர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட அன்று நான் முதன்முதலில் கமரா முன்னால் தோன்றினேன்.
எழுத்து அளவு:

ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.

2022இல் உலகின் தலைசிறந்த 100 பெண்களில் ஒருவராக பி.பி.சியால் தெரிவு செய்யப்பட்டமை குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2022 ஜனவரி 25இல் எனது கணவர் காணாமல்போய் 12 வருடங்களாகிவிட்டன. பிரகீத்தின் தலைவிதிக்குக் காரணமான ராஜபக்‌சக்களுக்குக் கடும் சாபத்தை வழங்குவதற்காக நான் எனது தலைமுடியை அகற்றி கறுப்பு ஆடை அணிந்தேன். அது மிகவும் கடுமையான சாபம். எனது கணவருக்கு நீதி கிடைக்கும் வரை எனது சாபம் நீடிக்கும்.

“2010 ஜனவரி 25ஆம் திகதி எனது கணவர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட அன்று நான் முதன்முதலில் கமரா முன்னால் தோன்றினேன். அதன் பின்னர் எனது கணவருக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக நான் பல தெரிவிக்க முடியாத நெருக்கடிகளின் மத்தியில் நீண்ட தூரம் பயணம் செய்துள்ளேன்.

“அவர்கள் பிரகீத்தை என்னிடமிருந்து எடுத்து 4 ஆயிரம் 712 நாள்கள் ஆகிவிட்டன. நீதிக்கான எனது தேடல் இன்னமும் ஓயவில்லை. இந்தப் பயணத்தின் போது பல நல்ல இதயங்கள் எனக்கு உதவியுள்ளன. சிலர் எனக்கு நீதி கிடைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

“2010 ஜனவரி 25ஆம் திகதி நான் பொலிஸ் நிலையத்திலிருந்த வேளை தற்போதைய ஜனாதிபதி என்னைத்  தொடர்புகொண்டு நாங்கள் பிரகீத்தை கண்டுபிடிக்க உதவுவோம், கவலைப்பட வேண்டாம் என்றார். இன்று அவர் ஜனாதிபதியாகியுள்ளார்.

“சாட்சியங்கள் மீதான அரசியல் அழுத்தத்தை நீக்கியதால் அவரால் பிரகீத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அரசியல் பழிவாங்கலால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏனையவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு ஜனாதிபதி உதவ வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்" என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

“என் சாபத்திலிருந்து ராஜபக்‌ஷர்க்கள் தப்ப முடியாது” | Tamil Leader | We Lead the Nation